சீரற்ற கால நிலை; யாழ்ப்பாணத்தில் கனமழை!

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலைமை காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்று (15) கடும் மழை பெய்து வருகிறது. நாளை (16) யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த சுழிபுரம் கிழக்கை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மின்னல் தாக்கங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அனர்த்த […]
நயாகரா சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள் விவகாரம்: சந்தேக நபர் மீது காவல்துறை குற்றச்சாட்டு

சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்த விசாரணையைத் தொடர்ந்து நயாகரா பிராந்திய காவல்துறை (Niagara Regional Police) சந்தேக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் காவல்துறை தெரிவித்துள்ளதாவது: மே 9 அன்று இளம் நபர் ஒருவருக்கு எதிராக நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்து, தங்களது இணையவழி சிறுவர் சுரண்டல் தடுப்புப் பிரிவு (ICE – Internet Child Exploitation) விசாரணையைத் தொடங்கியது. “சந்தேக நபர் பதின்ம வயது (Teenage) […]
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மியாகி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும், இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் பாரிய வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி இன்றும் (15) பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்று இன்றைய தினம் 331 ரூபாய் 15 சதத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. மத்திய வங்கியினால் இன்று (15) வெளியிடப்பட்ட நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323.53 ரூபாயாகவும், விற்பனை விலை 331.15 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதிக்குப் பின்னர், டொலரின் கொள்முதல் விலை 323 […]
மட்டக்களப்பில் சிறுமியை கடத்திச் சென்ற முச்சக்கரவண்டி மடக்கிப் பிடிப்பு ; இருவர் கைது
மட்டக்களப்பு நகரில் உறவினர் வீட்டுக்குச் சென்ற 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்ற முச்சக்கரவண்டியை, சிறுமியின் பெற்றோர் வீதியில் மடக்கிப் பிடித்ததைத் தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடத்தலோடு நேரடியாக தொடர்புடைய நபர் இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் எனவும் அவர் […]
சிட்னியில் நாளை திறந்து வைக்கப்படும் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் சமூகம், சிவில் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்களுடன் இணைந்து, நியூ சவுத் வேல்ஸின் பெண்டில் ஹில் (Pendle Hill, NSW) பகுதியில் உள்ள சிவிக் பூங்காவின் (Civic Park) ‘அமைதித் தோட்டத்தில்’ (Peace Garden) அமைக்கப்பட்டுள்ள ‘தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை’ நாளை முறைப்படி திறந்து வைக்கவுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம், தமிழ் மக்கள் தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், ஆற்றுப்படுத்துவதற்கும் மற்றும் எதிர்காலத் தலைமுறையினருக்கு வரலாற்றைக் கற்பிப்பதற்குமான ஒரு […]
இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்கள் அடையாளம்

சிறுவர் இணையவழிபாலியல் சுரண்டல் தொடர்பாக கியூபெக் (Quebec) மாகாணம் முழுவதும் நடத்தப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, இளம் வயதுடைய நான்கு சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கியூபெக் மாகாணக் காவல்துறையினரால் (Sûreté du Québec – SQ) 4 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்த விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 26 முதல் 73 வயதுக்கு இடைப்பட்ட 23 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். “கைது […]
இந்தியப் படையினர் இலங்கையில் இருந்த காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,000க்கும் அதிகம்!

இந்திய அமைதிப்படை காலத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமலாக்கப்பட்ட பத்தாயிரம் பேர் குறித்த விபரங்களை தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டம் வெளியிட்டுள்ளது இது குறித்து சர்வதேச நீதி மற்றும் உண்மைக்கான திட்டம் மேலும் தெரிவித்துள்ளதாவது. 1980களின் இறுதிப்பகுதியில் இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் இருந்த காலத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களது பெயர்விபரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது வெறும் எண்ணிக்கையல்ல| இல்லாமலாக்கப்பட்ட மனித உயிர்களின் பதிவாகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் ஆண்களாவர். […]
குமுழமுனையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரல்

முல்லைத்தீவு – குமுழமுனையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூலக்கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (15) நடைபெற்றது. அந்த வகையில் குமுழமுனைப் பகுதியைச் சேர்ந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான செல்லையா சிறீஸ்கந்தராசா தலைமையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இதன்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பங்கேற்றிருந்ததுடன், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி பகுதியில் ஸ்கேனிங் முறையை பயன்படுத்த அனுமதி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி என அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசத்தில் Magneto tellyurics audio frequency என்ற ஸ்கேனிங் முறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணை வியாழக்கிழமை (14) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் திறந்த மன்றிலே அழைக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அதன்போது சமுகமளித்திருந்தனர். அதன்போது குறித்த பிரதேசத்திற்கு கள […]