மீனவர்களுக்கான விசேட விழிப்புணர்வுத் திட்டம்

‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமான “போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்” கீழ், போதைப்பொருள் கடத்தலுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கடற்றொழில் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களினால் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு விரிவான விழிப்புணர்வுத் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்டமாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தலைமையில், மார்ச் 04ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், 05ஆம் திகதி காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டங்கள் நடைபெற்றன.

இந்த வேலைத்திட்டங்களில் உயர்மட்டப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், அந்தந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பான கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் படையின் கட்டளைத் தளபதிகளும் கலந்துகொண்டனர்.

நாட்டிற்குள் போதைப்பொருள் வரும் பிரதான வழியாகக் கடல் மார்க்கம் இனங்காணப்பட்டுள்ளதால், இந்த வேலைத்திட்டத் தொடரின் முதன்மை அவதானம் பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் மற்றும் படகு ஓட்டுநர்களை விழிப்புணர்வூட்டுவதிலேயே செலுத்தப்பட்டது.

இலங்கை கடற்படையினர் தமது கடல் நடவடிக்கைகள் மற்றும் படகுகளைப் பரிசோதிக்கும் முறைமைகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தலுக்குப் படகுகள் பயன்படுத்தப்பட்ட முன்னைய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளை முன்கூட்டியே இனங்கண்டு கொள்வதற்குப் படகு உரிமையாளர்களை வலுவூட்டினர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கருத்து தெரிவிக்கையில், “போதைப்பொருள் கடத்தலுக்குக் கடல் மார்க்கத்தைப் பயன்படுத்துவது எமது நாட்டிற்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாகும். இதில் ஈடுபடும் ஒரு சிறு குழுவினரால் ஒட்டுமொத்தக் கடற்றொழில் துறையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகின்றது.

படகு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை விழிப்புணர்வூட்டி, தமது பணியாளர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தைகளை முன்கூட்டியே இனங்கண்டு கொள்வதற்கு அவர்களைப் பலப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். இதன் மூலம் போதைப்பொருள் அனர்த்தத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கவும், அப்பாவி மீனவத் தொழிலாளர்கள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காது அவர்களைப் பாதுகாக்கவும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

‘போதையற்ற நாடு’ ஒன்றை உருவாக்கும் தேசிய கொள்கைக்குக் கடற்றொழில் அமைச்சு வழங்கும் முழுமையான பங்களிப்பு இதுவாகும். “இவ்வேலைத்திட்டங்களில் பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்களின் உற்சாகமான பங்கேற்பு மற்றும் அவர்களின் கருத்துக்கள் இங்கு விசேட பாராட்டுக்குள்ளானதுடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இப்போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களுக்குத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அவர்கள் இங்கு ஏகமனதாக உறுதியளித்தனர்.

தென் கரையோரத்தின் பிரதான நான்கு மீன்பிடி மாவட்டங்களை உள்ளடக்கி நடாத்தப்பட்ட இந்த விழிப்புணர்வுத் தொடர் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததுடன், கடற்றொழில் துறையைச் சட்டவிரோதக் கடத்தல்களிலிருந்து மீட்டெடுப்பதற்கு, ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினதும் ஒத்துழைப்புடன், அமைச்சு தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

Ravi

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் திருட்டு: ஆஸ்திரேலியா எச்சரித்த பின்னரே விழித்துக்கொண்ட இலங்கை

April 30, 2026

கெலும் பண்டார இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் சுட்டிக்காட்டிய பின்னரே,

harsha

கோப் (COPF) குழு கூட்டத்தில் பங்கேற்க திறைசேரி செயலாளர் மறுப்பு: மக்கள் ஆணையை அவமதிக்கும் செயல் – ஹர்ஷ

April 30, 2026

திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவிப்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். மேலும், இந்த நாட்டு மக்கள்

Tilvin-Silva

ராஜபக்சாக்களின் பணம் கண்டுபிடிக்கப்படும்- தேசிய மக்கள் சக்தி உறுதி

April 30, 2026

கடந்த கால அரசாங்கங்களின் போது தலைவர்களால் வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பணம் குறித்து, சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆதரவுடன் அரசாங்கம்

Ranil

.முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணம்: இலண்டன் தூதரகம் மற்றும் பயண நிறுவனம் மீது குற்றச்சாட்டுகள்

April 30, 2026

பொதுப்பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட உயர்மட்ட வழக்கு ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி திலக்

Harshana-Suriyapperuma

நிதிச் செயலாளர் சமூகமளிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை: சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை

April 30, 2026

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சமூகமளிக்கத் தவறினால், அவருக்கு எதிராக நாடாளுமன்ற பொறிமுறையூடாக

sund

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

April 30, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நீதியான விசாரணைகள்

Kajen

இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சி குறித்து…

April 30, 2026

“ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும்

mann

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

April 30, 2026

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய

soor

நிதிபற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது – திறைசேரி செயலாளர்

April 30, 2026

அரச நிதிப்பற்றியக் குழுவில் இன்று முன்னிலையாக முடியாதென திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். அது

FB_IMG_1777466129432

விளையாட்டில் அரசியல் வேண்டாம்: எரானுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘மாற்றத்திற்கான குழுவின்’ (Transformation Committee) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின்

684152693_122289994754194641_3108322150554372323_n

ஆள் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக விசாரணை: 47 வயது நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

காணாமல் போன சிறுமி ஒருவர் மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, 47 வயதுடைய நபர் ஒருவர்

peel poli

மிசிசாகாவில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

April 30, 2026

மிசிசாகாவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்கள் மீது