எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்தால் விலை உயர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் குறைந்தால் விலை உயர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது எனவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே உலகளவில் விலை உயர்வு பதிவாகியுள்ள நிலையில், அந்த அதிகரிப்பை நாமும் நிச்சயமாகச் சுமக்க வேண்டியிருக்கும் எனவும், இது யாராலும் தடுக்க முடியாத ஒரு நிலைமை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள […]
போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு!
இலங்கைக் கடற்படையினர் நாட்டின் தெற்கு திசையிலுள்ள ஆழ்கடலில் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி படகு ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர். இதன்போது குறித்த மீன்பிடி படகில் இருந்த 6 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகு, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கரைக்குக் கொண்டு வரப்படுவதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது எரிசக்தி அமைச்சு

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்காக முன்பதிவு செய்யப்பட்ட 36 நிலக்கரி கப்பல்களில் 22 கப்பல்கள் ஏற்கனவே தரையிறக்கப்பட்டுள்ளதாக இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மீதமுள்ள நிலக்கரி விநியோகத்தை எவ்விதத் தடங்கலுமின்றி வழங்க முடியும் என விநியோகஸ்தர் […]
மாவடிப்பள்ளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (07.03.2026) இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர், உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்த சாரதி என அறியப்பட்டுள்ளார். அத்துடன், அவர் அம்பாறை மாவட்டம் நவகம்புர உதயபுர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மதிப்பிற்குரிய கோரகே தொன் சானக சதுரங்க குமார என அடையாளம் காணப்பட்டார். உயிரிழந்தவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகப்பகுதி சிறிது சேதமடைந்த நிலையில் காணப்படுவதுடன், […]
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இலங்கை – இந்தியா இணக்கப்பாடு!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று(06.03.2026) இடம்பெற்றுள்ளதுடன், அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களும் விரிவாக ஆராய்ந்தனர். குறிப்பாக, பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடுகள் மற்றும் அண்டை நாடுகளுக்கு […]
சமூக வலைத்தள விற்பனை முகவர்களால் ஏமாற்றப்பட்ட யாழ். இளைஞர்

சமூக வலைத்தளங்கள் ஊடாக “காஸ் குக்கர்” விற்பனை என தம்பதி ஒன்று மோசடியில் ஈடுபட்டுவருவது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நவீன ரக காஸ் குக்கர் விற்பனைக்கு உள்ளதாக முகநூல் விளம்பரத்தை நம்பி அவர்களுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் தமது வங்கி கணக்கு இலக்கத்திற்கு பணத்தினை வைப்பிலிடுமாறும் , மேலதிக தகவல்களுக்கு வட்ஸ் அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறி இலக்கத்தை வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில், காஸ் […]
உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து

யாழ்.உரும்பிராய் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்ததானது சற்றமுன்னர்(7.3.2026) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், எரிபொருள் தாங்கியானது இன்றையதினம் உரும்பிராய் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருள் கிடங்கிற்கு எரிபொருளை நிரப்பி முயற்சித்த போது தீடீரென விபத்து ஏற்பட்டது. குறித்த தீ விபத்தில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் முழுமையாக சேதமடைந்ததாக தெரியவருகிறது. இது குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவேளை, யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்திப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு […]
டிட்வா’ சூறாவளியால் அனர்த்த முகாம்களில் உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்!

`Rebuilding Sri Lanka” ஜனாதிபதி செயலணி, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் பின்னர், நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்த ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டுள்ளது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மற்றும் நிரந்தரமாக நிவாரணங்களை வழங்குதல், அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை வழமை நிலைக்குக் கொண்டு வருதல் மற்றும் நீண்டகால அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல மற்றும் […]
அஸ்வெசும திட்டம் – வீட்டிற்கு வரப்போகும் அரச அதிகாரிகள்

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 2002 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 23ஆம் பிரிவின் பிரகாரம், நலன்புரி நன்மைகளைப் பெறும் நபர்களின் பெயர் பட்டியலை வருடாந்தம் புதுப்பிப்பது கட்டாயமாகும் என்பதால் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இச்செயன்முறைக்காகத் தகுதியுடைய 2,993,558 நபர்கள் ஏற்கனவே தமது தகவல்களைச் சமர்ப்பித்துள்ள […]
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மற்றும் கென்ய பிரதம அமைச்சரவைச் செயலாளர் இடையில் முக்கிய சந்திப்பு!

இந்தியாவின் புதுடெல்லியில் இடம்பெற்று வரும் ராய்சினா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கும் கென்யாவின் பிரதம அமைச்சரவைச் செயலாளர் முஸாலியா முதவாடிக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், வர்த்தகக் கூட்டாண்மையை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாத் துறையில் பரஸ்பர முதலீடுகளை அதிகரிப்பது குறித்து இணக்கம் காணப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு மேடைகளில் இலங்கை மற்றும் […]