வல்வெட்டித்துறையில் சீனிப்பாணி கரைசலை தேன் என விற்றவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சீனிப்பாணியை தூய தேன் எனவும் , கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்த விற்பனையாளருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் தினேஷ் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தூய தேன் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேன் போத்தல்களுக்குள் சீனிப்பாணியே காணப்பட்டதை கண்டறிந்து 19. 3/4 போத்தல் சீனிப்பாணி கரைசல்களை கைப்பற்றியுள்ளார். அதேவேளை தூய நெய் என விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த […]
மீனவர்களுக்கான விசேட விழிப்புணர்வுத் திட்டம்

‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01ஆம் திகதி ஆரம்பமான “போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்” கீழ், போதைப்பொருள் கடத்தலுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கடற்றொழில் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களினால் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு விரிவான விழிப்புணர்வுத் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தலைமையில், மார்ச் 04ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், 05ஆம் திகதி […]
ஊடக கற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசாவும், சிறப்பு விருந்தினர்களாக கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி கி.சண்முகநாதனும் ஊடகத் துறைப் பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து சிறப்பித்தனர். கனலி சஞ்சிகை […]
இலங்கையின் உணவுப் பாதுகாப்பு குறித்து அவசரக் கூட்டம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கான, உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவின் விசேட கூட்டம் நேற்று (06) பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. மக்களுக்கான […]
நாட்டில் நிலவும் வெப்பம் குறித்து கடுமையான எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதன்படி, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது ‘அவதானம் செலுத்தப்பட வேண்டிய’ மட்டத்தில் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (08) ஆம் திகதி வரை […]
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுநாயக்கவிலிருந்து டுபாய், ரியாத், தோஹா மற்றும் தம்மாம் ஆகிய இடங்களுக்கான சில விமானப் பயணங்கள் இதில் அடங்குகின்றன. பயணிகள் தமது விமானப் பயணங்களின் தற்போதைய நிலை குறித்த விபரங்களை www.srilankan.com என்ற இணையதளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உதவி […]
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வெற்றி!

வடக்கின் 119ஆவது சமரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிரடியாக வெற்றி பெற்றது. யாழ். மத்தியின் மைதானத்தில் வியாழக்கிழமை (05) ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த சென். ஜோன்ஸுக்கெதிரான இப்போட்டியில் 3 விக்கெட்டுகளால் யாழ். மத்தி வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: யாழ். மத்தி சென். ஜோன்ஸ்: 119/10 (பந்துவீச்சு: முரளி திசோன் 4/39, ஜெயசீலன் ஜெனோஷன் 1/6, வலன்டீன் ஹரிஸ் 1/37) யாழ். மத்தி: 95/10 (பந்துவீச்சு: கணேஷமூர்த்தி கெளசிகன் 3/35, முர்ஃபின் ரன்டியோ 2/13, […]
போதைப்பொருளை தடுக்கும் தேசிய திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1,073 பேர் கைது!
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று வெள்ளிக்கிழமை (06) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 1,073 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 1,077 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 14 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் […]
கசிப்புடன் இளைஞர் கைது!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனைப் பகுதியில் 28,500 மில்லி லீற்றர் (28.5 லீற்றர் ) கசிப்புடன் 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக் கமைய இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் […]
பிராந்திய நாடுகள் மீது நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்கு பதிலடியாக பிராந்திய நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் அந்த நாடுகளிடம் உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஈரானிய அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விசேட வீடியோ செய்தியிலேயே ஜனாதிபதி பெசெஷ்கியான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் ஈரானுக்கு கிடையாது என அவர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க […]