நேபாளத்தில் பாலேந்திர ஷா பிரதமராகும் வாய்ப்பு?

நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ராஷ்டிரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசுக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் காரணமாக கடந்த மாதங்களில் நேபாளம் கடுமையான அரசியல் பதற்றத்தை எதிர்கொண்டது. இந்த போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் நாட்டின் நிலைமை கட்டுக்குள் இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த பின்னணியில், பிரதமர் […]

தெஹ்ரானில் அமைந்துள்ள கமேனியின் பிரம்மாண்ட நிலத்தடிப் பதுங்கு குழி அழிப்பு

தெஹ்ரானில் அமைந்துள்ள ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவருக்குச் சொந்தமான இரகசிய ‘நிலத்தடி பதுங்கு குழி’ ஒன்றை தாம் அழித்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உரிமை கோரியுள்ளது. ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி உயிருடன் இருந்தபோது அவருக்காக உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான நிலத்தடி பதுங்கு குழி ஒன்றை இலக்கு வைத்து பாரிய வான் தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 50 இஸ்ரேலிய போர் விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டதாகப தெரிவிக்கப்படுகின்றது. தெஹ்ரானின் […]

பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ள குற்றவாளி பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீடு மீது துப்பாக்கிச் சூடு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான பட்டுவத்தே சாமர என்பவரின் மனைவியின் வீட்டின் மீது இன்று (07) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜா-எல, புனித ஆனா வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டின் மீதே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த சந்தேக நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சுரேஷ் சாலேவை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி

பொலிஸ் அறிக்கை ஒன்றை எடுத்து வராத எந்த நபருக்கும், அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சாலேவை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (06.03.2026) அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இதனால், 21 வயதான அவரது பிள்ளைக்கு கூட தனது தந்தையை சந்திக்க பொலிஸ் அறிக்கை ஒன்றை எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது […]

கனடாவில் ஐரிஷ் பாரம்பரிய மாதக் கொண்டாட்டம்!

பிராம்ப்டன் நகரம் – ஐரிஷ் பாரம்பரிய மாதத்தை கொண்டாட குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பிராம்ப்டன் நகரம் மற்றும் Rovers Club / Irish Pavilion of Carabram ஆகியவை இணைந்து ஐரிஷ் பாரம்பரிய மாதத்தை கொண்டாட பொது மக்களை அழைத்துள்ளது. இந்த ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு, பிராம்ப்டனிலும் கனடா முழுவதும் வாழும் ஐரிஷ்-கனடியர்களின் வரலாறு, கலாசாரம் மற்றும் சமூகத்திற்கான பங்களிப்புகளை கௌரவிக்கிறமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வு விபரம் தேதி: மார்ச் 17, 2026 நேரம்: காலை 10 மணி […]

உலக சந்தையில் தங்க விலை மாற்றம்?

உலக சந்தையில் இன்றைய தினம் (07.03.2026) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 5170 முதல் 5190 வரை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை நேற்றைய தினம் 5136 அமெரிக்க டொலர்களாகவும், நேற்று முன் தினம் 5,062.14 அமெரிக்க டொலர்களாகவும் பதிவாகியிருந்தது. அத்துடன் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 379200 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 410000 ரூபாவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் […]

பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது பாலியல் வல்லுறவு: டிக்கோயா வைத்தியசாலையில் சர்ச்சை

ஹட்டன் – டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் யுவதியின் சடலத்தை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், மூன்று மருத்துவமனை ஊழியர்கள் நான்கு முறை பிணவறைக்குச் சென்றது சிசிடிவி காட்சிகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் இருந்த இறந்த இளம் பெண்ணின் சடலத்தை மூன்று மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் […]

பிராம்டனில் வெள்ள அபாயம் அதிகரிக்கலாம் – நகராட்சி எச்சரிக்கை

பிராம்டன், ஒன்டாரியோ பகுதிகளில் பகல் நேர வெப்பநிலைகள் உயரத் தொடங்கியுள்ளதால், உருகும் பனி மற்றும் ஆற்றில் உள்ள பனிக்கட்டிகள் மழையுடன் சேர்ந்து உள்ளூர் பகுதிகளில் வெள்ள அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என பிராம்டன் நகர சபை செய்தி வெளியிட்டுள்ளது. பனிக்கட்டிகள் ஒன்று சேர்ந்து நீரின் ஓட்டத்தைத் தடுக்கலாம் எனவும் இதனால் ஆறுகள், ஓடைகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளின் அருகில் நீர்மட்டம் உயரலாம் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பிராம்டன் நகர சபையானது நகரம் முழுவதும் நிலைமைகளை தொடர்ந்து கண்காணித்து தேவையான […]

மிசிசாகாவில் பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

026 பிரிமியர்ஸ் கப் பாடசாலை மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று மிசிசாகாவில் நடைபெற்றது.மேற்படி கிரிக்கெட் போட்டியில் மாணவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குடும்பங்களுடன் இணைந்து கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சியத்ததாக ஒன்டாரியோ முதல்வர் டக் பேர்ட் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். ஒன்டாரியோ முழுவதும் கிரிக்கெட் விளையாட்டை வளர்ச்சியடையச் செய்ய உற்சாகமாக பங்கேற்கும் இளம் தலைமுறை அதிகரித்து வருவதைக் காண்பது மிகவும் பெருமையாகவுள்ளதாகவும் அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகள் குறித்து…

வரி திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவாக, வாகன இறக்குமதிக்கான மொத்த சுங்க வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் புதிய சுங்க வரி திருத்தங்கள் குறித்து வழங்கியுள்ள விளக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதி அமைச்சகத்தின் நிதி கொள்கை திணைக்கள அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, வரி அமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்த வகையில் சுங்க இறக்குமதி […]