இலங்கைக் கடற்பரப்பில் வெடித்து சிதறிய கப்பவில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானது

இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அருகே ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற ஈரானின் போர்க்கப்பல், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. ஈரானிய கப்பலில் இருந்த கடற்றொழிலாளர்களின் பிரேத பரிசோதனையில், வெடிப்பு காரணமாக ஏற்பட்ட எலும்பு முறிவுகள், உள் காயங்கள், நீரில் மூழ்குதல் போன்ற காரணங்களால் அவர்கள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஈரானிய கப்பல் மீதான நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் காரணமாக மூழ்கிய கப்பலில் இருந்து உயிரிழந்த 84 கடற்றொழிலாளர்களின் […]
சட்டவிரோத மணல் அகழ்வு : 15 படகுகள் பறிமுதல்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர், 15 மணல் ஏற்றிய படகுகளுடன் நேற்று(06.03.2026) மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உப்பாறு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள ஆற்றுப்பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுவதாக கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஆற்றில் மணல் ஏற்றிய நிலையில் காணப்பட்ட 15 படகுகளையும், அதில் இருந்த […]
டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கருகில் வெடிப்பு

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே இன்று (7) காலை வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து வான்பரப்பில் புகைமூட்டம் காணப்பட்டதாகவும் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலக்குகள் மீது தினசரி ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், உலகின் பரபரப்பான விமான நிலையமான டுபாயில் திங்கள்கிழமை முதல் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டன. இது குறித்து டுபாய் ஊடகப் பிரிவு (Dubai Media Office), எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வான் […]
ஜா-எலவில் துப்பாக்கிச் சூடு!

ன்று (07) அதிகாலை ஜா-எல பகுதியில் பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, துப்பாக்கிதாரிகள் குறித்த வீட்டின் அருகில் உள்ள மேலும் இரண்டு வீடுகளின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 1:25 மணியளவில் ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய, புனித ஆனா வீதி, இலக்கம் 05 இல் அமைந்துள்ள வீட்டை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. […]
இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

நிலவும் மோதல் நிலைமை காரணமாக, இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஹைஃபா (Haifa), நஹாரியா (Nahariya), எக்கர் (Acre), கலிலி (Galilee), அஃபுலா (Afula), கர்மேல் மலைத்தொடர் (Carmel Mountains), நாசரேத் […]
ஈரானில் நிலநடுக்கம்
ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07) காலை ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது பண்டார் அப்பாஸ் நகருக்கு மேற்கே 74 கிலோமீட்டர் தொலைவிலும், 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக அதன் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள் ஈரானில் பதிவான இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். கடந்த செவ்வாய்க்கிழமை, பார்ஸ் (Fars) மாகாணத்தின் […]
கடற்படையின் ட்ரோன் ஏவும் கப்பல் உட்பட ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

ஈரான் கடற்படையின் ட்ரோன் ஏவும் கப்பல் உட்பட 30 இற்கும் மேற்பட்ட கப்பல்களை தகர்த்ததாகவும், கடந்த 72 மணி நேரத்தில் ஈரானில் 200 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவ கமாண்டர் அட்மிரல் பிராட் கூபர் , பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத் ஆகியோர் புளோரிடாவில் நேற்று அளித்த பேட்டியில், ஈரான் கடற்படையை ஒட்டு மொத்தமாக அழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்க படைகள் ஈடுபட்டுள்ளன. ஈரானின்மிகப் பெரிய ட்ரோன் ஏவும் போர்க்கப்பலை நேற்று தகர்த்தோம். […]
முதியவர் அடித்துக் கொலை: ஒருவர் கைது!

மின்னேரியா – ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ரொட்டவெவ, கல்ஓய சந்தி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது. உயிரிழந்த முதியவரின் சகோதரியை, அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கி வந்துள்ளார். இது குறித்து அறிந்த முதியவர், தனது சகோதரியைக் காப்பாற்றுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். இதன்போது, கோபமடைந்த சகோதரியின் […]
கடலில் அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இருவர் மீட்பு!

ஹிக்கடுவை துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்று, கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்கரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஹிக்கடுவை பொலிஸ் உயிர் காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு அவர்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் 39 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும் இருவரும் ரஷ்ய நாட்டு பிரஜைகள் எனவும் தெரியவந்துள்ளது.
கோடாவுடன் இருவர் கைது!

கட்டுநாயக்க – தடுகங்ஓயா பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை (06) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கட்டுநாயக்க பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 945 லீற்றர் கோடாவும், மற்றுமொரு சந்தேகநபரிடமிருந்து 1890 லீற்றர் கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39 மற்றும் 55 வயதுடையவர்கள் எனவும், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் […]