மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று(29) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் ஒழுங்கமைப்பில், அபிவிருத்தி குழுவின் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, அபிவிருத்தி குழுவின் அனுமதி பெற்று விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்களுக்கான அங்கீகாரம் இதன்போது வழங்கப்பட்டது.

மன்னார் பகுதியில் உள்ள குறை குளம் புனரமைப்பு பணிகளின் போது ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூட்டத்தில் கடுமையான குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இது குறித்து உரிய விசாரணைகளை முன்னெடுத்து, உண்மைத் தன்மையை கண்டறியுமாறு இதன்போது அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

மன்னார் தீவுப் பகுதியில் அண்மைக்காலமாக கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டு வருவது தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது. அதனைத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன், மன்னார் மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினையான கடல் அரிப்பை தடுப்பதற்கு உரிய தீர்மானங்கள் இதன்போது எட்டப்பட்டன.

இவற்றுடன் மாவட்டத்தின் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகள் குறித்தும் பல்வேறு தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், துரைராசா ரவிகரன், எம்.ஜெகதீஸ்வரன், திணைக்களத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் நகர சபை, பிரதேச சபை, ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துக்களைப் பரிமாறினர்.

Harshana-Suriyapperuma

நிதிச் செயலாளர் சமூகமளிக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை: சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை

April 30, 2026

நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, நாடாளுமன்றக் குழு முன்னிலையில் சமூகமளிக்கத் தவறினால், அவருக்கு எதிராக நாடாளுமன்ற பொறிமுறையூடாக

sund

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

April 30, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு நிச்சயமாகத் தண்டனை கிடைக்கும். அதற்கான விசாரணைகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஒரு நீதியான விசாரணைகள்

Kajen

இனப்பிரச்சினைத் தீர்வுக்காகத் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்து வரும் முயற்சி குறித்து…

April 30, 2026

“ஈழத்தமிழர் அரசமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடானது, தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியை மேலும்

mann

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்: பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

April 30, 2026

மத்திய மற்றும் மாகாண அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அனுமதி வழங்குதல் மற்றும் மாவட்டத்தின் முக்கிய

soor

நிதிபற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது – திறைசேரி செயலாளர்

April 30, 2026

அரச நிதிப்பற்றியக் குழுவில் இன்று முன்னிலையாக முடியாதென திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். அது

FB_IMG_1777466129432

விளையாட்டில் அரசியல் வேண்டாம்: எரானுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘மாற்றத்திற்கான குழுவின்’ (Transformation Committee) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவை, கட்சியின்

684152693_122289994754194641_3108322150554372323_n

ஆள் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக விசாரணை: 47 வயது நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

காணாமல் போன சிறுமி ஒருவர் மற்றும் பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, 47 வயதுடைய நபர் ஒருவர்

peel poli

மிசிசாகாவில் துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

April 30, 2026

மிசிசாகாவில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையின் போது, தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு இளைஞர்கள் மீது

canada police251

கால்கரியில் தபால் பெட்டி உடைப்பு: இருவர் மீது 98 குற்றச்சாட்டுகள் பதிவு

April 30, 2026

நகரின் வடகிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற தபால் பெட்டி (Mailbox) உடைப்புச் சம்பவங்கள் குறித்த விசாரணையைத் தொடர்ந்து, இரண்டு ஆண்கள்

683205215_122290010084194641_7110331960142875781_n

வின்னிபெக் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச் சம்பவங்கள்: ஒன்டாரியோ இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டது

April 30, 2026

வின்னிபெக் நகரில் உள்ள உள்ளூர் வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர்ச்சியான மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்புச்

682498274_122290014542194641_8190665495581400332_n

வட ஒன்டாரியோ சிறுவன் கடத்தல் விவகாரம்: சிறைத்தண்டனையைத் தொடர்ந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் குற்றவாளி

April 30, 2026

வட ஒன்டாரியோவில் (Northern Ontario) சிறுவன் ஒருவனைக் கடத்திய குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட பிராம்ப்டன் (Brampton) பகுதியைச் சேர்ந்த 37

687038414_122290016300194641_7422793790922838407_n

டொராண்டோ நகரில் நடந்த கொள்ளைச் சம்பவம்: மூன்று சந்தேக நபர்களைத் தேடும் காவல்துறை

April 30, 2026

டொராண்டோ நகரின் மையப்பகுதியில் (Downtown) நடந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று சந்தேக நபர்களை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின்