சென்னை:
அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்ற தமிழர் நவநீதம் நவி பிள்ளைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நோபல் பரிசு:
2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்கச் சட்ட நிபுணரான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டது. உலகளாவிய அமைதியை மேம்படுத்துவதற்கும், சர்வதேச சட்டத்தின் மாண்புகளை நிலைநாட்டுவதற்கும் அவர் ஆற்றிய அசாத்திய பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழ.நெடுமாறன் கோரிக்கை:
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கோரிக்கையில், “ஐ.நா. மனித உரிமை ஆணையாளராக அவர் இருந்தபோது, ஈழம், ருவாண்டா, காசா ஆகிய இடங்களில் நடந்த இனவெறிப் படுகொலைகள் குறித்து விசாரிக்கும் நீதிமன்றங்களின் தலைவராக நேர்மையுடன் துணிச்சலாகச் செயல்பட்டார். அரசியல், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் வகையில், அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த முதலமைச்சர் விஜய்யை வேண்டிக் கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#PazhaNedumaran #NaviPillay #NobelPrize #CMVijay #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive