சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று (11) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சவூதி சட்டத்தரணிகள் குழுவின் கூட்டு முயற்சியின் பலனாக இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டைத் தயாரிப்பதற்காக இலங்கை விசேட சட்டத்தரணிகள் குழுவிற்கும் சவூதி சட்டத்தரணிகளுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாத்தின் ஒருங்கிணைப்பில் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் […]

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவு பல மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்த முற்கூட்டிய எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது நேற்று (11) மாலை 4:00 மணி முதல் இன்று (12) மாலை 4:00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு […]

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இப்பாகமுவ பகுதியில் நேற்று (11) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மத்திய கிழக்குப் போர் தொடங்குவதற்கு முன்னர் உலக சந்தையில் டீசல் பீப்பாய் ஒன்றின் விலை குறைவாக இருந்த நிலையில், போர் காரணமாக தற்போது டீசல் மற்றும் பெற்றோல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், […]