சென்னை:
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவி உடை சர்ச்சை:
சென்னை போரூரில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் துவக்கி வைக்க வந்த பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாகத் தமிழ்நாடு பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டிருந்தது.
தவெக கண்டனம்:
இது தொடர்பாக தவெக வெளியிட்ட பதிவில், “திருவள்ளுவர் உலகத் தமிழர்களுக்குப் பொதுவானவர். அவருக்குக் காவி வர்ணம் பூசி ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கும் பாஜகவின் முயற்சிகள் அறத்திற்கு எதிரானவை மற்றும் கண்டனத்திற்குரியவை. தமிழ் மண்ணின் அறத்திற்கு எதிராக நடப்போரைத் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். இன்றும் என்றும் தமிழுக்கும் தமிழர்க்கும் அரணாக நிற்பதை ஓர் அறம் சார்ந்த நிலைப்பாடாக தவெக கொண்டிருக்கும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Thiruvalluvar #TVK #BJP #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive