‘வனாதே பொக்கா’ மற்றும் ‘மெதவச்சியே அக்கா’ ஆகியோரின் சொத்துக்கள் முடக்கம்
தனுஷ்க புஷ்பகுமார எனப்படும் ‘வனாதே பொக்கா’ மற்றும் பாத்திமா ரெஜினா எனப்படும் ‘மெதவச்சியே அக்கா’ ஆகிய தம்பதியினரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்துருகிரிய, சாந்தாலோககம பகுதியில் அமைந்துள்ள சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு ஒன்றை 7 நாட்களுக்கு முடக்குவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த வீட்டின் உரிமையாளர்களான ‘வனாதே பொக்கா’ மற்றும் ‘மெதவச்சியே அக்கா’ ஆகிய தம்பதியினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.