திண்டிவனம்:
88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராமதாசின் பிறந்தநாளையொட்டி, பாமக தலைவரும், ராமதாசின் மகனுமான அன்புமணி ராமதாஸ், திண்டிவனத்தில் உள்ள தைலப்புரம் தோட்டத்துக்கு வருகை தந்து தந்தையை சந்தித்து ஆசி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் ராமதாஸ் பேசினார். அப்போது, அரசியலில் இருந்து விலகுவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியது பின்வருமாறு; \”எனது 88வது வயதில் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், இன்று முதல் அரசியல் பேச மாட்டேன். அரசியலில் தலையிட மாட்டேன். இனி அரசியலை அன்புமணி பார்த்துக் கொள்வார். என்னை காண வரும் அனைவரையும் பார்ப்பேன். வருபவர்கள் என்னிடம் நலம் விசாரிக்கலாம். நானும் நலம் விசாரிப்பேன். அரசியல் பேச வேண்டாம். என்னை இனி தொந்தரவு செய்ய வேண்டாம்\” என்று ராமதாஸ் கூறினார்.
#Ramadoss #PMK #AnbumaniRamadoss #Thindivanam #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #TamilNaduPolitics #VijayGovernment #PoliticalNews #TamilNaduNews #Politics2026 #PmkFounder #TamilPolitics