புத்தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புகைப்படம் தாங்கிய சுவரொட்டிகள்!

புத்தளம் நகரின் பல்வேறு இடங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தை ஒத்த உருவம் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டதன், 17வது ஆண்டு விழாவை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றிருந்தன. அதன் சூடு தணியும் முன்னரே விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் கொண்ட சுவரொட்டிகள் புத்தளம் நகரின் […]

இலங்கைச் சமூக ஆர்வலர் சமீரா மெஹபூப்தீன் பாதுகாப்பாக விடுவிப்பு; இஸ்ரேலிலிருந்து நாடு கடத்தப்பட்டார்!

காசா மீதான கடற்படை முற்றுகையை (Naval blockade) உடைப்பதை நோக்கமாகக் கொண்டு சர்வதேச “குளோபல் சுமுத் புளோட்டிலா” (Global Sumud Flotilla) மனிதாபிமானப் பணியில் இணைந்திருந்த இலங்கைச் சமூக ஆர்வலரான சமீரா மெஹபூப்தீன் (Sameera Mehboobdeen) பாதுகாப்பாக இருப்பதுடன், அவர் இஸ்ரேலிலிருந்து உத்தியோகபூர்வமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக (Deported) அதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருக்கும் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காசா முற்றுகையை மீற முயன்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சர்வதேச ஆர்வலர்களை இஸ்ரேல் விடுவித்து, நாடு கடத்தத் […]

பொருளாதார நெருக்கடி தீவிரம்; அவசர சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கடுமையான வீழ்ச்சிக்கு மத்தியில், நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எழுந்துள்ள பாரிய கவலைகளை அடுத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், நாடு மீண்டும் ஒருமுறை ஆபத்தான பொருளாதார எச்சரிக்கை சமிக்ஞைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இன்று (21) விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுச் சுமை மற்றும் தீவிரமடைந்து வரும் பொருளாதார அநிச்சயத்தன்மை […]

அமெரிக்காவிற்குள் நுழையப் பயணிக்கு அனுமதி மறுப்பு; சர்வதேச விமானம் மொன்றியாலிற்கு அவசரமாகத் திருப்பி விடப்பட்டது!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பரவி வரும் எபோலா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், அமெரிக்கா நோக்கிப் பயணித்த ஏர் பிரான்ஸ் (Air France) நிறுவனத்திற்குச் சொந்தமான சர்வதேச விமானமொன்று கனடாவின் மொன்றியால் (Montreal) நகருக்கு அவசரமாகத் திருப்பி விடப்பட்டுள்ளது. பாரிஸிலிருந்து (Paris) அமெரிக்காவின் டெட்ராய்ட் (Detroit) நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே, இவ்விமானம் நேற்று புதன்கிழமை மொன்றியாலிலுள்ள ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் (Trudeau International […]

பொலிஸாரைத் தாக்க முயன்ற ராஜபக்சக்களின் விசுவாசி குற்றவாளியாகத் தீர்ப்பு

தென்னிலங்கை பாடகர்களில் ஒருவரான சிலி என்றழைக்கப்படும் திலங்க விதூஷ என்பவர், பொலிஸாரைத் தாக்க முயன்ற குற்றச்சாட்டின் கீழான வழக்கொன்றில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு டெங்கு பரிசோதனைக்காக தலங்கம பிரதேச பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பாடகர் திலங்க விதூஷவின் வீட்டுக்கும் சோதனை மேற்கொள்வதற்காக சென்றுள்ளனர். அதன்போது குறித்த பாடகர் பொலிஸாரைத் தாக்க முயன்றதுடன், அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடுவெலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுமார் பன்னிரண்டு […]

கனடாவின் மிகப்பெரிய தங்கக் கொள்ளையில் தொடர்புடைய ஏர் கனடா ஊழியர் பல வருடங்களாகப் பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்தமை அம்பலம்!

கனடாவின் டொரொன்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Toronto Pearson International Airport) பல மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம் மாயமாவதற்கு பல வருடங்களுக்கு முன்னரேயே, இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏர் கனடா (Air Canada) ஊழியர் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்தமை தெரியவந்துள்ளது. கனடிய விமான நிலையங்களுக்குள் நிலவும் ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் (Organized crime) ஊடுருவல் குறித்து CTV News இன் ‘W5’ புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வரும் நான்கு […]

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை; டிக்கோயாவில் பதற்றம்

டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் 84 வயது மதிக்கத்தக்க தம்பதியே வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ஹட்டன் பொலிஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதில் கணவன் கட்டிலில் வெட்டுக்காயங்களுடனும் மனைவி மாடிப்படியருகிலும் வெட்டுக்காயங்களுடன் காணப்படுவதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை. டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் […]

மனிதாபிமானத்தை மலினப்படுத்தாதீர்கள் இஸ்ரேலின் பிடியில் சிக்கியுள்ள சமீரா குறித்து வெளிவிவகார அமைச்சருக்கு ரிஷாட் கடிதம்

இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலத்தில் கூடுதல் கவனமெடுத்து, அவரை விடுவிப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டுசென்றுள்ள ரிஷாட் பதியுதீன், இது குறித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளதாவது: காசாவுக்கான மனிதாபிமான உதவிகளுடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட படகுகளை இஸ்ரேல் […]

மே 25ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது கைதட்டுவதற்குத் தயாராக இருங்கள்; ஜனாதிபதி அநுரவின் உரையும் அவை குறித்த சர்ச்சைகளும்

பிரபல அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தொடர்புபட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான 500க்கும் மேற்பட்ட ஆவணங்கள்,ஆதாரங்கள் தேசிய மக்கள் சக்தி – ஜே.வி.பி கூட்டணியால் கடந்த 03-05-2022 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின . தாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இதில் உள்ள எவரும் தப்பிக்க முடியாது என்றும் இந்த கூட்டணியால் அறிவிக்கப்பட்டது .ஆனால் இன்றுவரை அது நடந்ததா? கடந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ”எதிர்வரும் […]

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்?

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹிநிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பதிலளித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். பண்டங்கள் கணக்கெடுப்புச் சபை ஒன்றின் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டில் தேசிய கலைக்கூடத்தின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பின்னரே இந்த காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இருப்புப் புத்தகத்தில் […]