நெல்லியடியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொட்டகைகளைப் பொலிஸார் அகற்ற முற்பட்டபோது, ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த சுகிர்தன், புஷ்பாகர், தயாபரன், சுரேந்திரன், நிமலன், நிலங்கதன் ஆகிய ஐவரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர். அதே நேரத்தில், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸார் கொட்டகைகளை அகற்றத் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சம்பவ இடத்துக்குத் திரும்பிய ஏற்பாட்டுக் குழுவினர், அதே இடத்தில் மீண்டும் கொட்டகை அமைக்க முற்பட்டபோது பொலிஸாருடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் நெல்லியடியில் நினைவேந்தல் கொட்டகையை மீண்டும் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.