மதுரை:
திமுக எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் என்றும், இங்கு இருப்பவர்கள் யாரும் பயப்படக் கூடியவர்கள் அல்ல என்றும் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு:
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கனிமொழி எம்.பி, “திமுகவைப் பழிவாங்கக் கூடிய வகையில் எல்லா முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போட்டு, அவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் திரும்பத் திரும்பப் பொய் வழக்குகள் போட்டு அவர்களை அச்சுறுத்திவிடலாம், விமர்சிக்காமல் நிறுத்திவிடலாம் என்ற நினைப்பில் இதையே செய்து கொண்டிருக்கிறார்கள்,” என்று கூறினார்.
வழக்குகளில் வெற்றி பெறுவோம்:
தொடர்ந்து பேசிய அவர், “திமுக எத்தனையோ பல சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம். இதில் இருக்கக்கூடிய யாரும் பயப்படக் கூடியவர்கள் அல்ல. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எல்லா வழக்குகளிலும் வெற்றி பெற்றுத் தாண்டி நிற்போம்,” என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
#Kanimozhi #DMK #Madurai #TamilNaduPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive