கீதாஞ்சலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கக் காணியை கிரிஷ் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு வழங்கும் கொடுக்கல் வாங்கலில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கீதாஞ்சலி ஜானகி டி சொய்சா சிறிவர்தனவை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி (01.12.2026) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம வெள்ளிக்கிழமை (20.11.2026) உத்தரவிட்டார்.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கம் எனப்படும் காணியை, கிரிஷ் டிரான்ஸ்வேர்க்ஸ் தனியார் நிறுவனத்திற்கு (Krrish Transworks Colombo (Pvt) Ltd) கையகப்படுத்திக்கொள்வதற்குத் தேவையான அனுமதிகளைத் துரிதமாகப் பெற்றுக்கொள்வதற்காக 70 மில்லியன் ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அந்நிறுவனத்தின் இந்தியப் பிரஜைகளான பணிப்பாளர்கள் அமித் கட்டியார், ராஜேந்திர பிரசாத் குப்தா, அந்நிறுவனத்தின் பணிப்பாளர் கீதாஞ்சலி ஜானகி டி சொய்சா சிறிவர்தன மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷவுக்குக் கடந்த வழக்குத் தவணையின் போது பிணை வழங்கப்பட்ட போதிலும், அப்பிணை உத்தரவை இடைநிறுத்தி கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 18 ஆம் திகதி (18.11.2026) இடைக்காலத் தடையுத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தது.

சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவைச் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னரே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
நீதவான் தனது உத்தரவை அறிவிக்கையில், நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பின், அவரை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி (01.12.2026) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

Parl

இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

November 20, 2026

​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்

images

வடக்கின் சிறந்த பிரதிநிதியாக சிவாஜிலிங்கம் திகழ்ந்தார் – NSSP மற்றும் USP இரங்கல்

November 20, 2026

தமிழ் மக்களின் விடுதலை அபிலாசைகளை நனவாக்கும் முயற்சிகளில், தெற்கின் ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் வர்க்க இயக்கங்களுடன் இணைந்து தொடர்ந்து

keth

கீதாஞ்சலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

November 20, 2026

கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கக் காணியை கிரிஷ் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு வழங்கும் கொடுக்கல் வாங்கலில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு

thada

274 மீன்பிடி வலைகளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

November 20, 2026

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வியாழக்கிழமை (19.11.2026) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்

WhatsApp Image 2026-11-20 at 22.35.23

நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைப்பில் பொலிசாருடன் வாக்குவாதம்

November 20, 2026

நெல்லியடியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொட்டகைகளைப் பொலிஸார் அகற்ற முற்பட்டபோது,

8

“முதல்வரை விமர்சித்த நாதக வழக்குரைஞர் மீதான வழக்கு ரத்து!” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

November 20, 2026

சென்னை: முதல்வர் விஜய்யை விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து

Y7KJTSVFKZEQ3JARQWD5NSFKY4

ட்ரம்ப், ஜின்பிங் மற்றும் புட்டின் சந்திப்புக்கு மத்தியில் புதிய கூட்டணிகளை நாடும் கனடா மற்றும் ஜப்பான்!

November 20, 2026

வல்லரசு நாடுகளை மையப்படுத்தி உலக ஒழுங்கை மாற்றியமைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய

7

“பெரும்பாலான ஊழியர்கள் ராஜினாமாவா?” – சர்ச்சைக்கு கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் விளக்கம்!

November 20, 2026

சென்னை: தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance TamilNadu) நிறுவனத்தில் இருந்து அதிக அளவிலான

6

“திமுக பல சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம்!” – கனிமொழி எம்.பி பேட்டி!

November 20, 2026

மதுரை: திமுக எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் என்றும், இங்கு இருப்பவர்கள் யாரும் பயப்படக் கூடியவர்கள் அல்ல என்றும்

r

உக்ரைனுக்குப் புட்டின் கடும் எச்சரிக்கை

November 20, 2026

தனது பெருமைக்குரிய கிரிமியா பாலத்தின் மீது உக்ரைன் நடத்திய அடையாளத் தாக்குதலுக்கு, ‘வலிமிகுந்த பழிவாங்கல்’ வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி

sritharan

கிளிநொச்சி – சாந்தபுரம் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்: நியாயமான கோரிக்கையை தடுத்தது ஏன்?

November 20, 2026

ளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் 7 பேரால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கோரியும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது

va

136 தன்னார்வ வழிகாட்டிகள் நிரந்தர அரச சேவைக்கு

November 20, 2026

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தில் பணியாற்றும் 136 தன்னார்வ வழிகாட்டிகளைத் திணைக்களத்தின் கள உதவியாளர் பதவிக்கு நிரந்தர அடிப்படையில் இணைத்துக் கொள்ளத்