ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் ‘பஸ் லலித்’ விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’ என்பவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை (19) பிற்பகல் அவிசாவளை நீதவான் பிரமோத்ய ஜயசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 71 கிலோ ஹெரோயின் சென்னையில் பறிமுதல்

கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயற்சிக்கப்பட்ட 71 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினை இந்திய வருவாய் விசாரணைப் பணியக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், இது தொடர்பில் சென்னையில் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளதாகவும் இந்திய நிதியமைச்சு தெரிவித்தது. நடப்பு ஆண்டில் இந்தியாவில் பதிவான மிகப்பெரிய ஒற்றை ஹெரோயின் பறிமுதல்களில் இதுவும் ஒன்று என அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பாரிய நடவடிக்கையாக, 71.24 கிலோகிராம் ஹெரோயின் தொகுதியை கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்தும் முயற்சி […]

பஹ்ரைன் அதிகாரிகளால் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பஹ்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் அங்கு வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு பஹ்ரைனிலுள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாகத் தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில், பஹ்ரைன் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானித்து, அவற்றிற்கு அமைவாகப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் அவசரத் தேவைகள் அல்லது உதவி தேவைப்படும் பட்சத்தில், பஹ்ரைனில் உள்ள இலங்கையர்கள் பின்வரும் […]

‘வீட்டுக்கொரு பட்டதாரி’ இலக்குப் பயணம்: சனிக்கிழமை முதல் ஆரம்பம்

மாணவர்களினதும் ஆசிரிய சமூகத்தினதும் தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்பு மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கில், பிரம்மாண்டமான விழிப்புணர்வு மற்றும் ஆளுமை விருத்திக் கருத்தரங்குகளைக் கல்வி அமைச்சின் அங்கீகாரத்தோடு ஏற்பாடு செய்துள்ளதாகவும், இந்நிகழ்வுகள் மலையகத்திலும் தலைநகரிலும் இடம்பெறவுள்ளதாகவும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மன்றத்தின் தலைவர் ஆர். விஸ்வநாதன் தெரிவித்துள்ளதாவது: “மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தனது 20 ஆண்டுகாலச் சமூகம்சார் கல்விப் பயணத்தில், மற்றுமொரு மாபெரும் கல்வி அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இதற்காகத் […]