‘வீட்டுக்கொரு பட்டதாரி’ இலக்குப் பயணம்: சனிக்கிழமை முதல் ஆரம்பம்

மாணவர்களினதும் ஆசிரிய சமூகத்தினதும் தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்பு மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கில், பிரம்மாண்டமான விழிப்புணர்வு மற்றும் ஆளுமை விருத்திக் கருத்தரங்குகளைக் கல்வி அமைச்சின் அங்கீகாரத்தோடு ஏற்பாடு செய்துள்ளதாகவும், இந்நிகழ்வுகள் மலையகத்திலும் தலைநகரிலும் இடம்பெறவுள்ளதாகவும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மன்றத்தின் தலைவர் ஆர். விஸ்வநாதன் தெரிவித்துள்ளதாவது: “மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தனது 20 ஆண்டுகாலச் சமூகம்சார் கல்விப் பயணத்தில், மற்றுமொரு மாபெரும் கல்வி அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

இதற்காகத் தமிழகத்தின் சர்வதேச ஆளுமை விருத்திப் பேச்சாளரும், ‘இளைய அப்துல்கலாம்’ என அழைக்கப்படுபவருமான டாக்டர் ஐ. ஜெகன் இன்று இலங்கைக்கு வருகை தருகிறார்.

நாளை சனிக்கிழமை (21ஆம் திகதி) முதல் 26ஆம் திகதி வரை ஆறு நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகள், மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொழும்பிலும் இடம்பெறவுள்ளன. அந்த வகையில்;

21ஆம் திகதி இரத்தினபுரியிலும்,
23ஆம் திகதி நாவலப்பிட்டியிலும்,
24ஆம் திகதி ஹட்டன் மற்றும் கொட்டகலையிலும்,
25ஆம் திகதி பம்பலப்பிட்டியிலும்,
26ஆம் திகதி கொழும்பு, முகத்துவாரத்திலும் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மலையகத்திலிருந்து ‘வீட்டுக்கொரு பட்டதாரி’ என்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு மன்றம் மேற்கொண்டு வருகின்ற பணிகளில் முக்கியத்துவம் மிக்கதாக இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு, சுமார் 50 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுகளில், 7,000க்கும் அதிகமான மாணவ – மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெறவுள்ளனர்.

கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூகச் சூழல் சார்ந்த பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது எதிர்காலத்தைத் தேடிக்கொண்டிருக்கும் மலையக மாணவர்களுக்கு, இத்தகைய ஆளுமை விருத்தி நிகழ்ச்சிகள் புதிய நம்பிக்கையையும் வழிகாட்டலையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாணவர்கள் தமது திறமைகளை அடையாளம் காணவும், வாழ்க்கை இலக்குகளை நிர்ணயிக்கவும், தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் எழுந்து நிற்கவும் இந்நிகழ்வுகள் ஊக்கமளிக்கும் என மன்றம் நம்பிக்கை கொண்டுள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ch

கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 71 கிலோ ஹெரோயின் சென்னையில் பறிமுதல்

November 20, 2026

கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயற்சிக்கப்பட்ட 71 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினை இந்திய வருவாய் விசாரணைப் பணியக அதிகாரிகள் பறிமுதல்

ko

பஹ்ரைன் அதிகாரிகளால் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

November 20, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பஹ்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில்

image_fdc4e89c70

‘வீட்டுக்கொரு பட்டதாரி’ இலக்குப் பயணம்: சனிக்கிழமை முதல் ஆரம்பம்

November 20, 2026

மாணவர்களினதும் ஆசிரிய சமூகத்தினதும் தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்பு மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கில், பிரம்மாண்டமான விழிப்புணர்வு மற்றும் ஆளுமை

IMG_2207

மாலதி நினைவேந்தல் விசாரணை: முன்னிலையாகும் கஜேந்திரன்

November 19, 2026

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான விசாரணைக்காக, யாழ்ப்பாணம்

IMG_2206

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வில் திடீர் மாற்றம்!

November 19, 2026

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, நாளை (20) அனைத்து

IMG_2205

காற்று மாசு தீவிரம் விமான சேவைகள் ரத்து

November 19, 2026

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இன்று (19)

IMG_2190

நாட்டில் பரவும் வைரஸ் தொற்று

November 19, 2026

நாட்டில் இன்புளுவென்சா (Influenza) சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி

IMG_2192

முன்பதிவு இல்லாமல் சேவை கிடையாது! வெளியான அறிவிப்பு

November 19, 2026

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) நாரஹேன்பிட்ட தலைமையகத்தில் வழங்கப்படும் அனைத்து பொதுச் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல்

QHA3DAQJHBEYLKIRSSJSR437IE

50 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்திற்குப் பின்னர் பிரிட்டிஷ் கொலம்பியா சிறையில் 81 வயது தொடர் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளி மரணம்

November 19, 2026

1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் அல்பெர்ட்டாவில் (Alberta) மூன்று பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர், பிரிட்டிஷ் கொலம்பியாவின்

hamilton poli

டொரொண்டோவில் இனவெறித் தாக்குதல் நடத்தி மக்களை வாகனத்தால் மோதப் போவதாக மிரட்டிய நபர் கைது: ஹாமில்டன் காவல்துறை

November 19, 2026

இனத்தின் அடிப்படையில் டொரொண்டோவில் உள்ள மக்களை வாகனத்தால் மோதிக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தனது சமூக நலப் பணியாளரிடம் (social worker)

7D6TYEWCWFGWDAAIRAA4GWZJAQ

கனடாவில் அதிகம் தேடப்படும் முதல் 25 குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு; முதல் மூன்று இடங்களில் இரண்டைப் பிடித்த டொரொண்டோ 

November 19, 2026

கனடாவில் அதிகம் தேடப்படும் முதல் 25 குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு; முதல் மூன்று இடங்களில் இரண்டைப் பிடித்த டொரொண்டோ டொரொண்டோ

exa

டிசம்பர் 8 சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்

November 19, 2026

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி