கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 71 கிலோ ஹெரோயின் சென்னையில் பறிமுதல்

கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயற்சிக்கப்பட்ட 71 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினை இந்திய வருவாய் விசாரணைப் பணியக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், இது தொடர்பில் சென்னையில் இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்துள்ளதாகவும் இந்திய நிதியமைச்சு தெரிவித்தது.

நடப்பு ஆண்டில் இந்தியாவில் பதிவான மிகப்பெரிய ஒற்றை ஹெரோயின் பறிமுதல்களில் இதுவும் ஒன்று என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான பாரிய நடவடிக்கையாக, 71.24 கிலோகிராம் ஹெரோயின் தொகுதியை கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு, கடந்த 17 முதல் 18 ஆம் திகதிவரை சென்னையில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இதன் மூலம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையிலிருந்து கணிசமான அளவு ஹெரோயின் இலங்கைக்குக் கடத்துவதற்காக எடுத்துச் செல்லப்படுவதாக உளவுத் தகவல் தெரிவித்திருந்தது.

சந்தேகத்துக்குரிய வாகனத்தையும், அதற்குப் பாதுகாப்பாகச் சென்ற இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் சென்னையில் இடைமறித்தனர்.

வாகனத்தைச் சோதனையிட்டபோது, வெளிர் வெள்ளை நிறத் தூள் அடங்கிய 69 பொதிகள் கண்டெடுக்கப்பட்டன.

சென்னையைப் போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தி, திருச்சிராப்பள்ளி (திருச்சி) வழியாக கரையோரப் பாதையில் இலங்கைக்குக் கடத்துவதே கடத்தல் காரர்களின் நோக்கம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

jud_1

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் ‘பஸ் லலித்’ விளக்கமறியலில்!

November 20, 2026

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’ என்பவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 04 ஆம்

ch

கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்ற 71 கிலோ ஹெரோயின் சென்னையில் பறிமுதல்

November 20, 2026

கரையோர வழியாக இலங்கைக்குக் கடத்த முயற்சிக்கப்பட்ட 71 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயினை இந்திய வருவாய் விசாரணைப் பணியக அதிகாரிகள் பறிமுதல்

ko

பஹ்ரைன் அதிகாரிகளால் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு!

November 20, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பஹ்ரைன் அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில்

image_fdc4e89c70

‘வீட்டுக்கொரு பட்டதாரி’ இலக்குப் பயணம்: சனிக்கிழமை முதல் ஆரம்பம்

November 20, 2026

மாணவர்களினதும் ஆசிரிய சமூகத்தினதும் தன்னம்பிக்கை, தலைமைத்துவப் பண்பு மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கில், பிரம்மாண்டமான விழிப்புணர்வு மற்றும் ஆளுமை

IMG_2207

மாலதி நினைவேந்தல் விசாரணை: முன்னிலையாகும் கஜேந்திரன்

November 19, 2026

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் பெண் மாவீரரான இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பான விசாரணைக்காக, யாழ்ப்பாணம்

IMG_2206

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வில் திடீர் மாற்றம்!

November 19, 2026

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக, நாளை (20) அனைத்து

IMG_2205

காற்று மாசு தீவிரம் விமான சேவைகள் ரத்து

November 19, 2026

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இன்று (19)

IMG_2190

நாட்டில் பரவும் வைரஸ் தொற்று

November 19, 2026

நாட்டில் இன்புளுவென்சா (Influenza) சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி

IMG_2192

முன்பதிவு இல்லாமல் சேவை கிடையாது! வெளியான அறிவிப்பு

November 19, 2026

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் (DMT) நாரஹேன்பிட்ட தலைமையகத்தில் வழங்கப்படும் அனைத்து பொதுச் சேவைகளும் எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி முதல்

QHA3DAQJHBEYLKIRSSJSR437IE

50 ஆண்டுகளுக்கும் மேலான சிறைவாசத்திற்குப் பின்னர் பிரிட்டிஷ் கொலம்பியா சிறையில் 81 வயது தொடர் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளி மரணம்

November 19, 2026

1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் அல்பெர்ட்டாவில் (Alberta) மூன்று பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர், பிரிட்டிஷ் கொலம்பியாவின்

hamilton poli

டொரொண்டோவில் இனவெறித் தாக்குதல் நடத்தி மக்களை வாகனத்தால் மோதப் போவதாக மிரட்டிய நபர் கைது: ஹாமில்டன் காவல்துறை

November 19, 2026

இனத்தின் அடிப்படையில் டொரொண்டோவில் உள்ள மக்களை வாகனத்தால் மோதிக் கொல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தனது சமூக நலப் பணியாளரிடம் (social worker)

7D6TYEWCWFGWDAAIRAA4GWZJAQ

கனடாவில் அதிகம் தேடப்படும் முதல் 25 குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு; முதல் மூன்று இடங்களில் இரண்டைப் பிடித்த டொரொண்டோ 

November 19, 2026

கனடாவில் அதிகம் தேடப்படும் முதல் 25 குற்றவாளிகள் பட்டியல் வெளியீடு; முதல் மூன்று இடங்களில் இரண்டைப் பிடித்த டொரொண்டோ டொரொண்டோ