செம்மணிப் புதைகுழி; நாணயங்களின் அடிப்படையில் காலத்தைக் கணிக்க முடியாது!

செம்மணிப் புதைகுழியில் இருந்து சில நாணயங்கள் மீட்கப்பட்டன. அவை உருக்குலைந்த நிலையிலும், வேறுபட்ட காலத்துக்கு உரியவையாகவும் இருந்தன. அத்துடன் புதைகுழியொன்றில் மீட்கப்படும் நாணயத்தை வைத்து அந்தப் புதைகுழியின் காலத்தைத் தீர்மானிக்க முடியாது என்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழி தொடர்பான தடயவியல் அறிக்கை, பேராசிரியர் ராஜ் சோமதேவவால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ள முக்கியமான அம்சங்களாவன,

செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வின் போது காலத்தை நிர்ணயிக்க உதவும் சான்றுப்பொருளாக நாணயங்கள் மட்டுமே கிடைத்தன. கிடைத்த நாணயங்களில் பெரும்பாலானவை கடுமையாக அரிக்கப்பட்டிருந்ததால், அவற்றின் மேற்பரப்பு அம்சங்களையும் பொறிக்கப்பட்ட எழுத்துகளையும் அடையாளம் காண்பது கடினமாக இருந்தது.

367 ஆவதாக அடையாளப்படுத்தப்பட்ட என்புத் தொகுதியுடன் மீட்கப்பட்ட நாணயக்குற்றியில் 1870 ஆம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்பகட்டப் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர் இதை எம்மால் அவதானிக்க முடிந்தது.

367ஆவதாக அடையாளப்படுத்தப்பட்ட என்புத் தொகுதியுடன் மீட்கப்பட்ட நாணயக்குற்றி ஒரு காலக்குறிப்பை எமக்குச் சுட்டிக்காட்டினாலும் அதனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு புதைகுழியில் காலத்தைத் தீர்மானிக்க முடியாது. புதைகுழிகளின் ஒப்பீட்டுக் கால நிர்ணயத்தை மேற்கொள்ளும்போது மிகுந்த எச்சரிக்கை அவசியமாகும். எனவே, நாணயங்களை புதைகுழிக்கான காலமாகக் கொள்வது அடிப்படையில் தவறாக அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட நாணயங்கள், ஒரே நேரத்தில் நிகழ்ந்த புதைப்பாக இல்லாமல் நீண்டகாலப் பகுதியில் படிப்படியாக நிகழ்ந்தவையாக இருக்கலாம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழியின் அகழ்வுப் பகுதி கிழக்கு, தென்கிழக்குத் திசைகளில் விரிவுபடுத்தப்பட்டபோது, கணிசமான தடிமனைக் கொண்ட சாம்பல் படிவு கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியிலிருந்து தென்கிழக்கே அண்ணளவாக 5 தொடக்கம் 6 மீற்றர் தொலைவில் மயானத்தின் தகன மேடை அமைந்துள்ளது.

அந்தத் தகன மேடையின் தாங்குச் சுவர் கட்டப்பட்டபோது, புதிய கட்டமைப்பை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த தகனப் பகுதி இடித்துச் சுத்தப்படுத்தப்பட்டு சமப்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அகழ்வாய்வில் அடையாளம் காணப்பட்ட தடிமனான சாம்பல் படிவு, இந்தச் செயல்பாட்டின் விளைவாக எஞ்சியிருந்த சாம்பல் குவியலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

இந்தச் சாம்பல் படிவத்திலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான நாணயங்கள் மீட்கப்பட்டன. அகழ்வுப் பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்களுடன் தொடர்புடைய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்களுடன் ஒப்பிடுகையில், இங்கு கிடைத்த நாணயங்கள் பொதுவாகச் சிறந்த நிலையில் பாதுகாக்கப்பட்டிருந்தன.

இதனால், அவற்றில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளையும் நாணயங்கள் அச்சிடப்பட்ட ஆண்டுகளையும் ஒப்பீட்டளவில் எளிதாக அடையாளம் காண முடிந்தது. ஆரம்பகட்டப் பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குப் பின்னர், கி.பி. 1920, 1944, 1963, 1975, 1978, 1982, 1991 மற்றும் 1994 ஆம் ஆண்டுக் குறிப்புகள் பொறிக்கப்பட்ட நாணயங்களாக அவை உள்ளன என்பதை அவதானிக்க முடிந்தது.

இந்த நாணயங்களின் காலப்பகிர்வு, தொடர்ச்சியற்ற காலவரிசையைக் காட்டுகிறது.

அதாவது, பதிவுசெய்யப்பட்ட சில நாணயங்களின் அச்சிடப்பட்ட ஆண்டுகளுக்கு இடையில் கணிசமான கால இடைவெளிகள் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில், இந்த நாணயங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்த ஒரு புதைப்பு நிகழ்வின் விளைவாக இல்லாமல், நீண்ட காலப்பகுதியில் படிப்படியாகச் சேர்ந்த பொருள்களாக இருக்கலாம் எனத் தெரிகிறது என்று அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ravikaran11

சைவ மக்களின் சமய மரியாதைக்கு நாட்டில் ஏற்பட்ட அவமதிப்புக்கள் – பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

October 23, 2026

இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது

deng

டெங்கு அபாயம் – அடையாளம் காணப்பட்ட 32 சுகாதார அலுவலர் பிரிவுகள்

October 23, 2026

நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சுகாதார அலுவலர் பிரிவுகளைக் குறிவைத்து, ஒரு சிறப்பு நுளம்பு

mullai

முல்லைத்தீவில் சுமார் 7 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

October 23, 2026

முல்லைத்தீவு மாவட்டத்தின் கெப்பாப்புலவில், பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 6.97 ஏக்கர் நிலம், பொதுப் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக

chemmani11111111111111

செம்மணிப் புதைகுழி; நாணயங்களின் அடிப்படையில் காலத்தைக் கணிக்க முடியாது!

October 23, 2026

செம்மணிப் புதைகுழியில் இருந்து சில நாணயங்கள் மீட்கப்பட்டன. அவை உருக்குலைந்த நிலையிலும், வேறுபட்ட காலத்துக்கு உரியவையாகவும் இருந்தன. அத்துடன் புதைகுழியொன்றில்

sau

சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் – தூதரகத்தை விட்டு வெளியேறும் அமெரிக்கா!

October 23, 2026

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று மாலை

gajendra

ராஜ்சோமதேவ ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி- ஒருநிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார்- நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

October 22, 2026

பேராசிரியர் ராஜ்சோமதேவ சுத்தமான சிங்கள பௌத்த தேசியவாதி அவர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றார் என தமிழ்தேசிய மக்கள்

16930815621492431198

பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை

October 22, 2026

விகாரமகாதேவி பூங்காவில் பௌத்தமதகுருமார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்மதகுருமாரை அங்கிருந்து அகற்றுவதற்கு நீதிமன்ற

Easter1

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்த இராணுவபுலனாய்வாளர்- நீதிமன்றில் தகவல்

October 22, 2026

இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்தார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலீப பீரிஸ்

court-judge-hammer-gavel-696x398

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கான வாய்மூல சமர்ப்பணம் நிறைவு

October 22, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வாய்மொழி சமர்ப்பணங்கள்

1200-675-27152847-thumbnail-16x9-kanimozhi

“சமூக ஊடகங்களில் பெண்களைத் தொடர்ந்து அவதூறாகப் பேசும் தவெகவினர்!” – கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

October 22, 2026

சென்னை: சட்டரீதியாகவும், காவல்துறையை வைத்தும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பெண்கள் மீது தவெகவினர் தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று

admk-whip-appointment-kp-munusamy-edappadi-palaniswami-meeting-cv-shanmugam-2026-05-16-17-43-38

“தவெக சீக்கிரம் காணாமல் போய்விடும்!” – கே.பி.முனுசாமி காட்டம்!

October 22, 2026

தருமபுரி: தமிழக அரசியலில் இருந்து தவெக சீக்கிரம் காணாமல் போய்விடும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

94106644181cab18a678116c6d8741f5

“பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!” – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

October 22, 2026

சென்னை: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வலுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு முதலமைச்சர்