இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்தார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டவேளை நீதிமன்றத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்த ராஜன் என்பவர் இலங்கை இராணுவத்தை சேர்ந்த கோப்ரல் சுரங்க என்பவருக்கு தகவல் ஒன்றை வழங்கினார்.
அதன்பின்னர் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட இன்சாவ் என்பவரின் உறவினரின் வீட்டை கண்காணிக்குமாறு சுரங்க ராஜனை கேட்டுக்கொண்டார்.
ராஜன் மிகவும் திறமையாக அந்த வீட்டிற்குள் சென்றார்.அந்த வீட்டிற்கு யார் வருகின்றனர் என்பதை கண்காணித்தார்.
அவர் அங்கிருந்தவேளை முஸ்லீம் பெண்கள் போல ஆடையணிந்த பெண்ணொருவரையும் ஆண் ஒருவரையும் பார்த்தார்.ராஜன் அவர்களுடன் கதைத்தார்.
அந்த பெண் தமிழில் கதை;தார் ஆனால் அந்த பெண்பயன்படுத்திய மொழி அந்த பகுதிக்கு உரியதல்ல மட்டக்களப்பை சேர்ந்தவர் போல உரையாடுகின்றார் என ராஜன் சுரங்கவிற்கு தெரியப்படுத்தினார்.
ராஜன் அந்த பெண்ணின் தோற்றத்தையும் அவதானித்துவைத்துக்கொண்டார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் சாராஜஸ்மினின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானவேளை ராஜன் அந்த பெண்தான் இவர் என்பதை சுரங்கவிடம் தெரிவித்தார்.
ஆனால் சுரங்க ராஜனிடம் இனி இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தவேண்டாம் மறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டார்.
இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கிடைத்த தகவல்களை மறைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றமை தெளிவாக தெரிகின்றது இது சுரேஸ் சாலேயின் அனுமதியுடனேயே இடம்பெற்றுள்ளது என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.