மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மஹிந்த நாமலுக்குக் கடிதம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, அவரது செயலாளர் ஒருவரால் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், கடிதத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து விடயங்களும் இதுவரை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வைக்குமாறு தனது மகனுக்கு மஹிந்த ராஜபக்ஷ அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டு […]
சைவ மக்களின் சமய மரியாதைக்கு நாட்டில் ஏற்பட்ட அவமதிப்புக்கள் – பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாருக்கான நீதியும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு நாட்டையும் அரண்மனை வாழ்வையும் துறந்து ஞானம் கண்ட புத்தர் பெருமானின் சிலை தற்போது நில ஆக்கிரமிப்பின் அடையாளமாக பாவிக்கப்படுவதாகவும் தெரவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வெளிநாட்டு விருந்தினர்களுக்குரிய இராஜதந்திர மரியாதையை வலியுறுத்துகின்ற அதே உறுதியுடன், உள்நாட்டிலும் அனைத்து மக்களுக்கும் […]
டெங்கு அபாயம் – அடையாளம் காணப்பட்ட 32 சுகாதார அலுவலர் பிரிவுகள்

நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சுகாதார அலுவலர் பிரிவுகளைக் குறிவைத்து, ஒரு சிறப்பு நுளம்பு ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு ஒழிப்புத் திட்டம் நவம்பர் 2 முதல் 7 ஆம் திகதி வரை செயல்படுத்தப்படும் என்று சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சமூக மருத்துவ நிபுணர் பிரஷில சமரவீர இந்தக் […]
முல்லைத்தீவில் சுமார் 7 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கெப்பாப்புலவில், பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 6.97 ஏக்கர் நிலம், பொதுப் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 59 வது படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளால், இந்த நிலம் முறைப்படி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரும் அரசாங்க அதிபருமான ஏ. உமாமகேஸ்வரன் முன்னிலையில் இந்த ஒப்படைப்பு இடம்பெற்றது. அத்தியாவசிய தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்குத் தேவைப்படும் பகுதிகளைத் தவிர, பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டிலிருந்த நிலங்களை படிப்படியாக அவற்றின் […]
செம்மணிப் புதைகுழி; நாணயங்களின் அடிப்படையில் காலத்தைக் கணிக்க முடியாது!

செம்மணிப் புதைகுழியில் இருந்து சில நாணயங்கள் மீட்கப்பட்டன. அவை உருக்குலைந்த நிலையிலும், வேறுபட்ட காலத்துக்கு உரியவையாகவும் இருந்தன. அத்துடன் புதைகுழியொன்றில் மீட்கப்படும் நாணயத்தை வைத்து அந்தப் புதைகுழியின் காலத்தைத் தீர்மானிக்க முடியாது என்றும் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழி தொடர்பான தடயவியல் அறிக்கை, பேராசிரியர் ராஜ் சோமதேவவால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் உள்ள முக்கியமான அம்சங்களாவன, செம்மணிப் புதைகுழி அகழ்வாய்வின் போது காலத்தை நிர்ணயிக்க உதவும் சான்றுப்பொருளாக […]
சவுதி விமான நிலையம் மீது தாக்குதல் – தூதரகத்தை விட்டு வெளியேறும் அமெரிக்கா!

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை தீவிரமாக உள்ளது என்றும், விமான நிலையத்திற்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் ஈரான் ஆதரவு பெற்ற […]