சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறது.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2 ‘திரைப்படத்தில் ‘சுப்பர் ஸ்டார் ‘ ரஜினிகாந்த் , எஸ் ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ,மிர்ணா, ரித்விக், சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன், சுனில் சுகதா, சுஜித் சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான மோகன்லால் – சிவ ராஜ்குமார்- ஜாக்கி ஷெராப் – ஹிர்த்திக் ரோஷன்- விஜய் சேதுபதி – மிதுன் சக்கரவர்த்தி – விநாயகன் – ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி பிரத்யேக காணொளி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் காணொளி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
இந்திய இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனான முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளான ஒக்டோபர் 15 ஆம் திகதியன்று சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர் 2’ வெளியாவது ரசிகர்களின் கவனத்தை பிரத்யேகமாக கவர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.