பிரான்சில் தற்கொடையாளர் நினைவுதினம் அனுஷ்டிப்பு

இன்று ஜுலை 5 உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழ் மக்களால் தற்கொடையாளர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் தற்கொடைத் தாக்குதலை நடத்தியது 1987ஆம் ஆண்டு ஜுலை 5ம் நாளாகும். அந்தவகையில் பிரான்ஸ் பாரதி விளையாட்டுக்கழகம் இன்று கப்டன் சாந்தா நினைவாக உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்றை நடாத்தியுள்ளது. போரின் முடிவுக்குப் பின்னர், ஈழத்தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஆண்டுதோறும் ஜூலை 5 அன்று கரும்புலிகளுக்கு […]
காமினேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் ஈரான் நாட்டுத் தலைவர்களை “ஒரே குண்டு வீச்சில்” அமெரிக்காவால் அழிக்க முடியும் – ட்ரம்ப்

ஈரானின் முன்னாள் உயர் தலைவர் அலி காமினேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருந்த ஈரான் நாட்டுத் தலைவர்களை “ஒரே குண்டு வீச்சில்” அமெரிக்காவால் அழிக்க முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும், அவ்வாறு செய்தால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்பதால், அந்த முயற்சியைத் தவிர்க்கப்போவதாகவும் அவர் கூறினார். இறுதிச் சடங்கில் ஈரானின் சிரேஷ்ட தலைவர்களும், பல நாட்டுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்த கருத்து வெளியாகியுள்ளது. “அவர்கள் அனைவரும் அங்குதான் […]
‘குமுதினி’ படகின் திருத்தப் பணிகள்

நெடுந்தீவு உள்ளிட்ட தீவக மக்களின் அன்றாடப் போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத்தோடு மிக நெருங்கிய தொடர்புடைய ‘குமுதினி’ படகின் திருத்தப் பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சனிக்கிழமை (04) அன்று நேரில் சென்று பார்வையிட்டார். இப்பணிகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து அவர் கேட்டறிந்தார். இந்தச் சந்திப்பு குறித்து அவர் மேலும் கூறியதாவது: “தீவக மக்களுக்குப் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தடங்கலற்ற கடல் போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். அந்த நோக்கில், திருத்தப் பணிகள் தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றப்படுவதை […]
பொலிஸ் நிலைய துப்பாக்கி ஆற்றிலிருந்து மீட்பு

யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு சொந்தமான அரச துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில், அந்த பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் . இந்நிலையில், குறித்த துப்பாக்கியை தேடி பொலிஸ் கடற்படை பிரிவின் சுழியோடிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், யட்டியந்தோட்டை கராகொட பாலத்திற்கு அடியில் ஆழமான பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனதாக கூறப்பட்ட துப்பாக்கி ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வோன் (Vaughan) நகரில் வர்த்தக நிலையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு: ஆண் ஒருவர் படுகாயம்

வோன் (Vaughan) நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வெளியே இரவு நேரத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்டீல்ஸ் அவென்யூ வெஸ்ட் (Steeles Avenue West) மற்றும் ஸ்கோல்ஸ் வீதி (Scholes Road) ஆகிய பகுதிகளுக்கு அருகில், அதிகாலை 2 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) சமூக ஊடகப் பதிவொன்றில் தெரிவித்துள்ளனர். சம்பவ […]
எட்டோபிகோக் (Etobicoke) கடற்கரைப் பாறைகளில் படகு மோதி விபத்து: ஆண், பெண் இருவர் படுகாயம்

ஹம்பர் பே பார்க் ஈஸ்ட் (Humber Bay Park East) கடற்கரைப் பகுதியில் படகு ஒன்று பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, இன்று காலை இருவர் மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மெரின் பரேட் டிரைவ் (Marine Parade Drive) மற்றும் லேக் ஷோர் புலிவர்ட் வெஸ்ட் (Lake Shore Boulevard West) ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள ஹம்பர் பே பார்க் ஈஸ்ட் பகுதியில், அதிகாலை 5 மணிக்குப் பின்னர் இந்த விபத்து […]
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை: 2 கைதிகள் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த 34 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறைச்சாலையின் பெண்கள் பிரிவை சேர்ந்த பெண் கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை தொடர்ந்து, ஆண்களும் சிறைச்சாலை கட்டிடங்களின் […]
இலங்கை தற்போது பொருளாதார மீட்சி பெறுகிறது

இலங்கை தற்போது ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையை அடைந்திருப்பதற்கு, தவறுகளைத் திருத்திக்கொண்டு வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டதே முக்கிய காரணம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிதி நிலைமை குறித்த உண்மையான தகவல்கள், அக்காலப்பகுதியில் இருந்த ஜனாதிபதிகளிடம் கூட மறைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணையத்தள அலைவரிசை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். அங்கு அவர் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கான அடிப்படை காரணங்கள் மற்றும் நிர்வாக ரீதியான பலவீனங்கள் […]
58,000 ஐ கடந்தது டெங்கு நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை
இலங்கையில் இந்த ஆண்டில் டெங்குக் காய்ச்சலின் பரவல் கணிசமாக அதிகரித்து வருகின்றது என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள புதிய புள்ளிவிவரங்கள் எச்சரித்துள்ளன. நேற்று நள்ளிரவு வரையிலான தரவுகளின்படி, நாடு முழுவதும் 58 ஆயிரத்து 810 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 39 மரணங்களும் பதிவாகியுள்ளன. தற்போது டெங்கு நோயாளர்களின் மரண வீதம் 0.07 சதவீதமாகக் காணப்படுகின்றது. பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் மாத்திரம் மிக அதிகமாக 21 ஆயிரத்து 547 நோயாளர்கள் […]
யானை தாக்கி குடும்பஸ்தர் பலி
திருகோணமலை – சூரியபுர, ஜனசவிவெவ பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வான்எல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் மற்றுமொருவருடன் இணைந்து வயல்வெளிக்குச் சென்றிருந்த போதே காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் சூரியபுர பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.