இன்று ஜுலை 5 உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழ் மக்களால் தற்கொடையாளர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் தற்கொடைத் தாக்குதலை நடத்தியது 1987ஆம் ஆண்டு ஜுலை 5ம் நாளாகும்.
அந்தவகையில் பிரான்ஸ் பாரதி விளையாட்டுக்கழகம் இன்று கப்டன் சாந்தா நினைவாக உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியொன்றை நடாத்தியுள்ளது.
போரின் முடிவுக்குப் பின்னர், ஈழத்தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்கள் ஆண்டுதோறும் ஜூலை 5 அன்று கரும்புலிகளுக்கு மலர் தூவி, ஈகச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.