பொலித்தீன், இலத்திரனியல் கழிவுகள் மீள்சுழற்சி

பொலித்தீன் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக இயற்றப்பட்ட சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாகவே இந்த புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். இதற்கமைய, உற்பத்தியாளர் ஒருவர் தனது தயாரிப்பொன்றை நுகர்வோருக்கு விற்பனை செய்த பின்னர், அதன் மீள்சுழற்சி செயன்முறையை சரியான முறையில் கண்காணித்து உறுதிப்படுத்துவது அவசியமாக்கப்படும் என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவில் கொக்கிகுமார் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழ் தேசியத்தையும் சமூக முன்னேற்றத்தையும் பற்றி அன்றாடம் பேசிய, “கொக்கிகுமார்” என அழைக்கப்படும் அழகேந்திரராசா சுஜித்அவர்களின் மறைவையொட்டிய நினைவேந்தல் நிகழ்வு.கனடாவில் இடம்பெற்றது. கொக்கிகுமார் சமூக வலைத்தளங்கள் ஊடாக எமது விடுதலை போராட்ட வரலாறு எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்பவற்றை பதிவு செய்தவர் என நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். கொக்கிகுமார் யார் என அறிய துடித்த மக்கள் பலர் ஏன் என்றால் அவரது கருத்துக்கள் அவர் விதைத்த விடயங்கள் மிகவும் பெறுமதியானவை அவர் அண்மையில் புலம்பெயர்ந்து […]

நெடுந்தீவு மாவலி பெரியதுறை வீதிப் மேம்படுத்தலுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

நெடுந்தீவு மாவலி பெரியதுறை வீதிப் மேம்படுத்தல் 135.90 மில்லியன் ரூபாவில் – பெருந் திட்டத்திற்கு அமைய அபிவிருத்தி செய்வதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் (05.07.2026) காலை 10.00 மணிக்கு நெடுந்தீவில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்குபற்றுதல்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் […]

சுகாதார சீர்கேட்டுடன் கச்சத்தீவு திருவிழாவில் உணவு விற்றவருக்கு சிறை

கச்சத்தீவு திருவிழாவின் போது சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்த உரிமையாளருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்த நீதவான், அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்ததுடன், 24ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளார். கச்சத்தீவு பெருவிழா இவ்வருடம் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெற்றது. இதன் போது, சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகத்தில், தேநீர் தயாரிக்கும் பகுதி சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டமை, உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முரணான வகையில் பழங்கள் விற்பனை செய்தமை, உணவு கையாள்பவர் […]

குதிரை பேரத்தை உருவாக்கியவர்களே திமுகவினர்தான் – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: தவெக அரசு மீது தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குதிரை பேரம் நடப்பதாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தி.மு.க.-வை நேரடியாகச் சாடினார். வரலாற்றை நினைவு கூர்ந்த அவர், குதிரை பேரத்தை அரசியல் கலாச்சாரமாக மாற்றியது தி.மு.க. தான் என்று கூறினார். 96 எம்.எல்.ஏ.-க்கள் இருந்தபோது மைனாரிட்டி ஆட்சியைத் தக்கவைக்க தி.மு.க. குதிரை பேரம் நடத்தியதாக அவர் குறிப்பிட்டார். தவெக தலைமையிலான அரசு மக்கள் ஆதரவுடனும், வலுவான கூட்டணியுடனும் மிகச்சிறப்பாகச் செயல்படுவதாகக் கூறிய […]

டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக தமிழரை தான் நியமிக்க வேண்டும்; முதல்வர் விஜய் தொகுதியில் நாதக ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகத் தமிழரையே நியமிக்க வலியுறுத்தி, முதலமைச்சர் விஜய்யின் தொகுதியான பெரம்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், ஆளும் தவெக அரசின் நியமனங்களை விமர்சிப்பதாக அமைந்தது. மேலும், வெளிமாநிலத்தவர்கள் ஊடுருவல், தமிழக வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கான முன்னுரிமை மற்றும் சிங்கப்பெண் அதிரடிப் படையின் செயல்திறன் குறித்த கேள்விகளை அவர் எழுப்பினார். கடந்த கால […]

“குதிரை பேரம் உண்மையாக இருந்தால்”… திருமாவளவன் பரபரப்பு பேட்டி

சென்னை: குதிரை பேரம் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். குதிரை பேரம் உண்மையாகவே நடக்கும் பட்சத்தில், ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். அ.தி.மு.க.-வை தவெக வளைக்க முயற்சிக்கும்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க. மற்றும் தவெக ஆகிய […]

முருகப்பெருமானின் வரலாற்றைத் திரித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ‘என்டிஆர்- திரிவிக்ரம்’ பட குழுவுக்கு சீமான் எச்சரிக்கை

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முருகப்பெருமானின் வரலாற்றைத் திரிப்பதாகக் கூறி ஆந்திரப் படக்குழுவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘என்.டி.ஆர்- திரிவிக்ரம்’ படத்தில் முருகனை வடபுலத்தில் பிறந்தவர் போலக் காட்டுவது தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிரானது என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழர் இறைவனைத் தவறாகச் சித்தரிக்கும் எந்தவொரு முயற்சியையும் தமிழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். தமிழகத் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாவதைத் தடுக்க கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும், சட்டம்-ஒழுங்குப் […]

யாழில் இராணுவ முகாம் அருகே துணிகர வாள்வெட்டு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு மிக அருகில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று, அங்கிருந்தவர்கள் மீது கொடூரமான வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரங்கேறிய இத்துணிகரச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், நாவாந்துறை இராணுவ முகாம் அருகே வசிக்கும் இக்குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட […]

கஜேந்திரகுமார் MP – செந்தமிழன் சீமான் சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியப் பேரவையின் தூதுக்குழுவினருக்கும் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நீலங்கரையில் இடம்பெற்றது.   இச் சந்திப்பு சனிக்கிழமை 04.07.2026 இரவு 8.00 மணியளவில் செந்தமிழன் சீமான் அவர்களது நீலாங்கரை இல்லத்தில் நடைபெற்றது.   இச்சந்திப்பின்போது ஈழத் தமிழ் மக்களுக்காக அவர் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றமைக்கு நன்றி தெரிவித்ததோடு, தொடர்ந்தும் அவர் உறுதியுடன் குரல்கொடுக்க வேண்டுமெனவும் வேண்டிக் கொண்டனர். […]