தமிழ் தேசியத்தையும் சமூக முன்னேற்றத்தையும் பற்றி அன்றாடம் பேசிய, “கொக்கிகுமார்”
என அழைக்கப்படும் அழகேந்திரராசா சுஜித்அவர்களின் மறைவையொட்டிய
நினைவேந்தல் நிகழ்வு.கனடாவில் இடம்பெற்றது.
கொக்கிகுமார் சமூக வலைத்தளங்கள் ஊடாக எமது விடுதலை போராட்ட வரலாறு எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்பவற்றை பதிவு செய்தவர் என நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
கொக்கிகுமார் யார் என அறிய துடித்த மக்கள் பலர் ஏன் என்றால் அவரது கருத்துக்கள் அவர் விதைத்த விடயங்கள் மிகவும் பெறுமதியானவை அவர் அண்மையில் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தார் என நிகழ்வில் உரையாற்றியவர்கள் தெரிவித்தனர்.
2009 ம் ஆண்டில் எமது விடுதலை போராட்டம் மௌனிக்கப்படும்போது அவன் 11 வயது சிறுவன் ஆனால் விடுதலைப்போராட்டம் சார்ந்த விடயங்களை வாசித்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு கற்பித்தவர் அவர்,எனவும் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.