இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளார்கள் – நிசாம் காரியப்பர்

ரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளதுடன், கவலையடைந்துள்ளார்கள். தலைகுனிந்துள்ளார்கள். பாராளுமன்றத்தில் கூட கண்டனத்தை வெளியிடாதது அவமானத்துக்குரியது. டொனால்ட் ட்ரம்ப் பெரிய சைத்தான், இஸ்ரேலில் உள்ளவர் குட்டி சைத்தான் இவர்களே உலக அமைதிக்கு இன்று அச்சுறுத்தலாக செயற்படுகிறார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அந்நிய செலவாணி சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெரிய சைத்தான், இஸ்ரேலில் உள்ளவர் குட்டி சைத்தான்.இவர்கள் இருவரும் தான் இன்று முழு உலகின் அமைதிக்கும் பெறும் அச்சுறுத்தலாக காணப்படுகிறார்கள். ஈரானில் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட தலைமைத்துவத்தை சர்வதேச சட்டத்துக்கு முரணாக செயற்பட்டு இவர்கள் கொலை செய்துள்ளார்கள்.

இந்த பெரிய சைத்தான் மனித படுகொலைகளை செய்து விட்டு விளையாட்டு போட்டிக்கு செல்லும் போது அணியும் தொப்பியை அணிந்துக் கொண்டு ஊடகங்களுக்கு பேசுகிறார். அவரது கருத்துக்களை கேட்கும் போதும், பார்க்கும் போதும் மிகவும் ஆத்திரமாகவுள்ளது.ஆனால் இலங்கையின் ஜனாதிபதி இதனை கண்டிக்கவில்லை. ஒரு வார்த்தைகள் கூட அதுப்பற்றி பேசவில்லை.

தோற்றம் பெற்றுள்ள யுத்தத்தத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஜனாதிபதி விடயங்களை முன்வைத்திருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். யுத்தத்தை ஆரம்பித்தவர்களுக்கு எதிராக ஒருவார்த்தை கூட பேசாத அளவுக்கு ஜனாதிபதியும், அரசாங்கமும் இந்த சக்திகளுக்கு அடிபணிந்துள்ளார்கள்.உண்மையில் இது நியாயமற்றது.

மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய நிலைமையை முழு உலக நாடுகளும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில், சர்வாதிகார சக்திகளின் செயற்பாடு தொடர்பில் ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு ஒட்டுமொத்த மக்களும், இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளதுடன், கவலையடைந்துள்ளார்கள்.

ஈரானுக்கு எதிராக அசிங்கமாக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததற்கு ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் தலைகுனிந்துள்ளார்கள்.பாராளுமன்றத்தில் கூட ஒரு கண்டனத்தை வெளியிடாதது அவமானத்துக்குரியது. நான் அமெரிக்காவுக்கு எதிராகவோ அல்லது அமெரிக்க பிரஜைகளுக்கு எதிராகவோ பேசவில்லை. சர்வதேச சட்டத்துக்கு முரணான ஒரு தனிநபர் தான்தோன்றித்தனமாக செயற்பட்டு பிறிதொரு நாட்டின் சுயாதீனத்தை கேள்விக்குள்ளாக்குவதையே எதிர்க்கிறோம் என்றார்.

1777567784-death-6

ஒரு காலில் மூன்று வெட்டுக் காயங்களும், கையில் ஒரு காயம் , உடலுக்கு அருகில் சிறிய கத்தி-2.5 மில்லியன்டொலர் சைபர் மோசடி தொடர்பில் இடைநிறுத்தப்பட்ட நிதி அமைச்சின் அதிகாரியின் மரணம் குறித்த மேலதிக தகவல்கள் 

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 | இரவு 10:17 மணி சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் கொள்ளை சம்பவம்

Uni

இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராக அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் மே தினத்தை நினைவு கூருகின்றோம் – யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்

April 30, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை (30) வெளியிட்டுள்ளது. அந்த

f

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள்; மீண்டும் தவறவிடப்போகிறோமா?

April 30, 2026

வட்டுக்கோட்டை தீர்மானம் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தி. மீண்டும் தவறவிடப்போகிறோமா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்

put

புடினுடன் தொலைபேசி உரையாடல்; ட்ரம்ப் முக்கிய கோரிக்கை

April 30, 2026

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற 90 நிமிட தொலைபேசி உரையாடலில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக உதவி செய்யத்

RBKOMUGNEVG3ZHUJGP6GE3XTP4

டொரன்டோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படகுச் சங்கம் தீக்கிரை: திட்டமிட்டுத் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகம்!

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – டொரன்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த படகுச் சங்கத்தின் கட்டடம்

684105632_993797889662066_5036282836550723148_n

யாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற தேனிசை செல்லப்பா புகழ் வணக்க நிகழ்வு!

April 30, 2026

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு, போராளிகள் நலன்புரிச் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை (ஏப்ரல்

1777557288-monk-6

 போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம்

April 30, 2026

போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்து பௌத்த தேரர்கள் வெளிநாடு செல்வதற்கான சட்டங்கள் அறிமுகம் ஏப்ரல் 30, 2026 – வெளிநாடுகளுக்குப்

Harsha-Harshana-Suriyapperuma

திறைசேரி செயலாளருடன் CoPF சந்திப்பு: “2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 10 பரிமாற்றங்கள் திருடப்பட்டுள்ளன

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு தரப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய 10 அரசாங்க கடன் திருப்பிச் செலுத்தும்

death-pictures-4i5d2eg6pdb913xl

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

heat-1554460827

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

April 30, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்