சென்னை:
தீர்ந்துபோன சக்தி என்று அதிமுகவை விமர்சித்தவர்களுக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
குதிரை பேரம்:
மைனாரிட்டி அரசை அமைத்த தவெக, மெஜாரிட்டிக்காக அதிமுக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தியதன் விளைவுதான் இந்த இடைத்தேர்தல். தோல்வி உறுதியானதால் அதிகார துஷ்பிரயோகம் செய்தும், அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் புனைந்தும் ஆளுங்கட்சி குறுக்கு வழியில் வெற்றி பெற்றுள்ளது,” என இபிஎஸ் சாடியுள்ளார்.
ரேக்ளா வண்டியில் வலம்:
“அரை மணி நேரம் பேசினாலே கொத்துப் புரோட்டா போட்டுவிடுவார் என்று வீர வசனம் பேசிய முதல்வர் விஜய், இத்தேர்தலுக்காகத் தெருத்தெருவாக அலைந்து விசில் ஊத வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். குற்றவாளியுடன் ரேக்ளா வண்டியில் வலம் வந்து ஜனநாயகப் படுகொலை செய்துள்ளனர்.”
தற்காலிக வெற்றி:
“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக ஓர் இரும்புக் கோட்டை. இந்தத் தற்காலிக வெற்றியை வைத்து அதிமுகவை அழித்துவிடலாம் என யாரும் பகல் கனவு காண வேண்டாம். பிள்ளை பிடிக்கும் கும்பல் போலச் செயல்படும் தவெக அரசின் இந்தச் சோதனைகளை அதிமுக முறியடிக்கும்,” என அவர் எச்சரித்துள்ளார்.
#EPS #EdappadiPalaniswami #AIADMK #TVK #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive