நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இலங்கை விமானப்படை அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கை விமானப்படையின் பயிற்சிப் பாடசாலையில் கடமையாற்றிய, ஸ்குவாட்ரன் லீடர் எஸ்.ஏ.ஆர்.எஸ்.யு. பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த அதிகாரி தனது நிரந்தர முகவரியிலிருந்து தற்காலிக முகவரிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த அதிகாரியின் நிரந்தர முகவரி கெப்பெட்டிபொல, எரபெபெத்த, ‘ஜயசிறி’ இல்லம் எனவும், தற்காலிக முகவரி தியத்தலாவ, கஹகொல்ல, ரஞ்சல்லாவ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.