ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய அமைச்சர் சந்திரசேகர்.!

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் 2026 நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக, அமைச்சர் சந்திரசேகரன் அவர்கள் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

குறித்த போராட்டத்தை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தோற்றுப்போன, கேடுகெட்ட, சுத்துமாத்து அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாகவும், அதனை அரசியல் நோக்கங்களுடன் தொடர்புபடுத்தியும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருப்பது, போராட்டத்தை ஏற்பாடு செய்த சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பையும், அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினாலோ அல்லது அரசியல்வாதிகளினாலோ ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் 14 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து திட்டமிட்டு, ஏற்பாடு செய்து முன்னெடுத்த மக்கள் போராட்டமாகும்.

இப்போராட்டத்திற்கு அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும், விவசாய அமைப்புகளுக்கும், கால்நடை வளர்ப்பாளர் அமைப்புகளுக்கும், மீனவர் சங்க அமைப்புக்களும், மதத் தலைவர்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையிலேயே பல்வேறு இன, மத, மொழி மற்றும் சமூகப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் இதில் பங்கேற்றனர்.

இது இன, மத வேறுபாடுகளைக் கடந்த மக்கள் போராட்டம். நவம்பர் 2ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும், சமூக அமைப்புகளும், மதத் தலைவர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து பங்கேற்றமை மிக முக்கியமான சிறப்பம்சம்மாகும்.

இன, மத, மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு பொதுவான நீதிக் கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் ஒன்றிணைந்தனர். இது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, மதத்திற்கோ அல்லது அரசியல் தரப்பிற்கோ உரிய போராட்டம் அல்ல. அனைத்து மக்களினதும் உரிமைகள், வாழ்வாதாரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியை வலியுறுத்திய ஒரு மக்கள் போராட்டமாகும்.

இத்தகைய பரந்துபட்ட மக்கள் பங்கேற்பைச் சாத்தியமாக்கியது சிவில் சமூகத்தின் சுயாதீனமான ஒருங்கிணைப்பும், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையுமேயாகும்.

அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களை ஒன்றிணைத்து, பல்வேறு சமூகங்களுக்கிடையே பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக ஒற்றுமையையும் கூட்டுச் செயற்பாட்டையும் உருவாக்குவதில் சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தை இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது.

சிவில் சமூகத்தின் பலம் என்பது ஒரு குறிப்பிட்ட அரசியல் தரப்பையோ அல்லது இனத்தையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. மாறாக, அனைத்து மக்களையும் நீதிக்காகவும் பொதுநலனுக்காகவும் ஒன்றிணைப்பதிலேயே உள்ளது. நவம்பர் 2ஆம் திகதி நடைபெற்ற போராட்டம் இதற்கான ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும்.

எனவே, இவ்வாறான ஒரு பன்மைத்துவ மக்கள் போராட்டத்தை அரசியல் கட்சிகளின் போராட்டமாகவோ அல்லது இனவாதப் போராட்டமாகவோ சித்தரிப்பது, அதில் பங்கேற்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் உண்மையான பங்களிப்பையும் ஒற்றுமையையும் மறுதலிப்பதாகும்.

போராட்டத்தின் அடிப்படை மற்றும் உண்மையான நோக்கங்கள்

  1. மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்தல்.
  2. நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோருதல்.
  3. கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாத்தல்.
  4. கால்நடைகள் மீதான தாக்குதல்களையும் பண்ணையாளர்கள் மீதான அச்சுறுத்தல்களையும் நிறுத்துதல்.
  5. கிழக்கு மாகாணத்தின் மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துதல்.

இவை எந்தவொரு இனத்திற்கோ, மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரான கோரிக்கைகள் அல்ல. இவை சட்டத்தின் ஆட்சி, நீதிக்கான உரிமை, வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளாகும்.

ஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சராக, மக்கள் மத்தியில் எழுந்துள்ள பிரச்சினைகளையும் அவற்றுக்காக சிவில் சமூக அமைப்புகள் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் மதித்து அணுக வேண்டியது அவசியமாகும். மாறாக, இத்தகைய மக்கள் போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசி, அவற்றின் உண்மையான நோக்கத்தைத் திசைதிருப்புவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

குறிப்பாக, மயிலத்தமடு – மாதவனை பிரச்சினை நீண்டகாலமாக தீர்வின்றித் தொடர்கின்ற நிலையில், அதற்கான நீதியான தீர்வை வலியுறுத்தி பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து குரலெழுப்பியிருப்பதை அரசியல் நோக்கத்துடன் சித்தரிப்பது, சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.

மேலும், இந்தப் போராட்டத்தை இனவாதப் போராட்டமாகச் சித்தரிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் நாம் நிராகரிக்கின்றோம்.

மேய்ச்சல் நிலப் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பாளர்களின் உரிமைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இனவாதக் கோரிக்கைகள் அல்ல. அவை சட்டத்தையும் நீதியையும் மதிக்கும் எந்தவொரு குடிமகனும் ஆதரிக்கக்கூடிய பொதுவான உரிமைக் கோரிக்கைகளாகும்.

எனவே, அமைச்சர் சந்திரசேகரன் அவர்களே!

  • நவம்பர் 2ஆம் திகதி நடைபெற்ற மக்கள் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை மீளாய்வு செய்து, அவற்றை உடனடியாக மீளப்பெற வேண்டும்.
  • 14 சிவில் சமூக அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த மக்கள் போராட்டத்தின் உண்மையான ஏற்பாட்டாளர்களையும் அதன் நோக்கங்களையும் பகிரங்கமாக அங்கீகரிக்க வேண்டும்.
  • சிவில் சமூக அமைப்புகளின் சுயாதீனமான செயற்பாடுகளையும் மக்களின் ஜனநாயகப் போராட்ட உரிமையையும் மதித்து நடக்க வேண்டும்.
  • மயிலத்தமடு – மாதவனைப் பிரச்சினைக்கு அரசியல் சாயமின்றி, சட்டத்தின் அடிப்படையில் உடனடித் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நிலைப்பாடு தெளிவானது. சிவில் சமூகத்தின் குரலை அரசியல் குரலாக மாற்றிவிட முடியாது. மக்களின் நியாயமான கோரிக்கைகளை இனவாதக் கோரிக்கைகளாகச் சித்தரித்துவிட முடியாது. 14 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த மக்கள் போராட்டத்தை எந்தவொரு அரசியல் அடையாளத்திற்குள்ளும் முடக்கிவிட முடியாது.

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து பங்கேற்ற இந்தப் போராட்டம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் சிவில் சமூகத்தின் சுயாதீனமான மக்கள் ஒருங்கிணைப்புக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அமைச்சரின் நாடாளுமன்றக் கருத்து, சிவில் சமூகத்தின் இத்தகைய ஜனநாயகப் பங்களிப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமையால் அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

மக்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும், வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காகவும் எமது சிவில் சமூகப் பணிகள் தொடரும்.

 

trump carney 1

அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சியின் வசம் வருவது, கனடா-அமெரிக்க வர்த்தகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

November 4, 2026

1. அரசியல் மாற்றம் மற்றும் வர்த்தகப் பின்னணி அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவு: 2026 நவம்பர் இடைக்காலத் தேர்தலில், அமெரிக்க

Chandra

ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய அமைச்சர் சந்திரசேகர்.!

November 4, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும்

batti land

ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய அமைச்சர் சந்திரசேகர்.!

November 4, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் 2026

dead'

தொடருந்து கடவைக்கு அருகில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ மாணவி!

November 4, 2026

காலி, கராபிட்டிய மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்த 25 வயதுடைய படபெண்டி கவிந்தி யுக்மணி சில்வா

887228215_1544865581002480_9181666431685214934_n

அராலிச் சந்தியில் விபத்து – மின்கம்பத்துடன் முச்சக்கரவண்டி மோதி மூன்று இளைஞர்கள் படுகாயம்!

November 4, 2026

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில்

Namal-Rajapaksa-2

கிரிஷ் பணபரிமாற்ற வழக்கில் நாமலுக்கு பிணை – எனினும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

November 4, 2026

கிரிஷ் பணபரிமாற்ற விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு

iran ships

ஈரானிய கப்பல் பணியாளர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்பிய விவகாரம் – அமெரிக்க தடைகளை எதிர்கொள்கின்றதா இலங்கை

November 4, 2026

ஐக்கிய நாடுகள் கடல்சட்ட உடன்படிக்கையின் கீழ் ஈரானை சேர்ந்த 40 கப்பல்பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்கிய பின்னர் அவர்களை அவர்களது

Yoshitha-new

பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுத்தார் யோஷித

November 4, 2026

வெளிப்படுத்தப்படாத 59 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வங்கி வைப்புத்தொகை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கின் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை, முன்னாள்

protest11

புதிய பாதுகாப்பு சட்டமூலங்களை மீளப்பெறுங்கள் – நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம்

November 4, 2026

முன்னிலைசோசலிசக் கட்சியினால் (FSP) வழிநடத்தப்படும் ஜனக அரகலய இயக்கம்‘(Jana Aragala Movement), பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTB)

THAD

தட்டம்மை தவிர்க்க தடுப்பூசி முக்கியம்!

November 4, 2026

தட்டம்மை என்பது காற்றில் எளிதில் பரவக்கூடிய ஒரு நோய்த் தொற்றாகும். இது கடுமையான சிக்கல்களுக்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும்.அதிக காய்ச்சல்,புண், சிவந்த

trump

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதி உதவி நிறுத்தம்

November 4, 2026

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் மதிப்பிலான நிதி உதவியை 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள்

CHEMM

செம்மணி விவகாரம் தொடர்பில் சோமரத்ன ராஜபக்ஷ வாக்குமூலத்தில் தீர்வைத் தேடுக!

November 4, 2026

வடக்கில் இடம்பெற்ற காணாமல்போனோர் விவகாரத்திற்குப் பிரதான தீர்வாக, செம்மணி விவகாரம் தொடர்பில் கைதியாகவுள்ள முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின்