ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய அமைச்சர் சந்திரசேகர்.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் 2026 நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக, அமைச்சர் சந்திரசேகரன் அவர்கள் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது. குறித்த போராட்டத்தை வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தோற்றுப்போன, கேடுகெட்ட, சுத்துமாத்து அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாகவும், அதனை அரசியல் நோக்கங்களுடன் தொடர்புபடுத்தியும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருப்பது, […]
தொடருந்து கடவைக்கு அருகில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் மருத்துவ மாணவி!

காலி, கராபிட்டிய மருத்துவ பீடத்தில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்த 25 வயதுடைய படபெண்டி கவிந்தி யுக்மணி சில்வா என்ற மாணவி, நேற்று (03/11) அதிகாலை தொடருந்து கடவைக்கு அருகிலுள்ள வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தண்டவாளத்தை ஆய்வு செய்யச் சென்ற திணைக்கள ஊழியர் ஒருவர் சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்தில் மாணவியின் கைப்பேசிக்கு அழைப்பு வந்ததையடுத்து, அதற்குப் பதிலளித்த பொலிஸ் அதிகாரி அவரது கணவருடன் பேசியுள்ளார். கணவரின் வாக்குமூலத்தின்படி, உயிரிழப்பதற்கு முன்னர் […]
அராலிச் சந்தியில் விபத்து – மின்கம்பத்துடன் முச்சக்கரவண்டி மோதி மூன்று இளைஞர்கள் படுகாயம்!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (04.11) காலை இடம்பெற்றுள்ளது. ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த தொலைத்தொடர்புக் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளனர். இதனையடுத்து, அவ்வழியாகச் […]
கிரிஷ் பணபரிமாற்ற வழக்கில் நாமலுக்கு பிணை – எனினும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிரிஷ் பணபரிமாற்ற விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமல்ராஜபக்சவிற்கு வெளிநாட்டு பயணத்தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது. எனினும் நாமல் ராஜபக்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேறு வழக்குகளில் அவர் பிணை பெறாததால் அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் இருப்பார். கொழும்பு கோட்டையில் உள்ள டிரான்ஸ்வேர்க் சதுக்க காணியை பலநோக்கு அபிவிருத்தி திட்டத்திற்காக கிரிஷ் நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்வது தொடர்பில் 100 மில்லியன் இலஞ்சமாக […]
ஈரானிய கப்பல் பணியாளர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்பிய விவகாரம் – அமெரிக்க தடைகளை எதிர்கொள்கின்றதா இலங்கை

ஐக்கிய நாடுகள் கடல்சட்ட உடன்படிக்கையின் கீழ் ஈரானை சேர்ந்த 40 கப்பல்பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சையை வழங்கிய பின்னர் அவர்களை அவர்களது நாட்டிற்கு இலங்கை திருப்பிஅனுப்பியமை போன்ற நடவடிக்கைகளால் இலங்கை தடைகளை எதிர்கொள்ளும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ஆங்கில ஊடகமொன்றின் மின்னஞ்சல் கேள்விக்கு பதிலளித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்டுள்ள கப்பல்களுக்கு எரிபொருள் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சேவைகளை வழங்குவது அல்லது பணியாளர்களை மாற்றுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டால் அந்த […]
பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டுகளை மறுத்தார் யோஷித

வெளிப்படுத்தப்படாத 59 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வங்கி வைப்புத்தொகை தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட பணமோசடி வழக்கின் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு இன்று வாசித்துக் காட்டப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. யோஷித ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், பிரதிவாதி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக (குற்றவாளி இல்லை என) நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அதன்படி, வழக்கிற்கு […]
புதிய பாதுகாப்பு சட்டமூலங்களை மீளப்பெறுங்கள் – நாடாளுமன்றத்திற்கு அருகில் இன்று ஆர்ப்பாட்டம்

முன்னிலைசோசலிசக் கட்சியினால் (FSP) வழிநடத்தப்படும் ஜனக அரகலய இயக்கம்‘(Jana Aragala Movement), பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம் (PSTB) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் (POCB) ஆகியவற்றைத் திரும்பப் பெறவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்து செய்யவும் வலியுறுத்தி இன்று (04) நாடாளுமன்றத்தை நோக்கிப்பேரணியாக செல்லும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனக அரகலய இயக்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே, ஜனநாயகத்தை மதிக்கும் தொழிற்சங்கங்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள் […]
தட்டம்மை தவிர்க்க தடுப்பூசி முக்கியம்!

தட்டம்மை என்பது காற்றில் எளிதில் பரவக்கூடிய ஒரு நோய்த் தொற்றாகும். இது கடுமையான சிக்கல்களுக்கும் மரணத்திற்கும் வழிவகுக்கும்.அதிக காய்ச்சல்,புண், சிவந்த மற்றும் நீர் வடியும் கண்கள்,இருமல்,தும்மல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2024-ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் தட்டம்மை நோயால் சுமார் 95,000 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே.தடுப்பூசி மூலம் மட்டுமே தட்டம்மையைத் தடுக்க முடியும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, இந்நோய் வராமல் […]
2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதி உதவி நிறுத்தம்

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் மதிப்பிலான நிதி உதவியை 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முற்றிலும் நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் ட்ரம்ப் கூறும்போது, “இஸ்ரேலுக்கான நிதி உதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்துவது குறித்து அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி வழங்கி உதவ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் […]
செம்மணி விவகாரம் தொடர்பில் சோமரத்ன ராஜபக்ஷ வாக்குமூலத்தில் தீர்வைத் தேடுக!

வடக்கில் இடம்பெற்ற காணாமல்போனோர் விவகாரத்திற்குப் பிரதான தீர்வாக, செம்மணி விவகாரம் தொடர்பில் கைதியாகவுள்ள முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளைத் தேட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பயிரிடப்படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாகத் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ‘ஹட்டன் பிரகடனம்’ மூலம் உத்தரவாதம் வழங்கப்பட்டதாகவும், இன்று அந்தக் காணிகளைத் தனியார் கம்பனிகளுக்கு வழங்க அரசாங்கம் முடிவு […]