2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதி உதவி நிறுத்தம்

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆண்டுக்கு 4 பில்லியன் டொலர் மதிப்பிலான நிதி உதவியை 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் முற்றிலும் நிறுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் ட்ரம்ப் கூறும்போது, “இஸ்ரேலுக்கான நிதி உதவியை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறுத்துவது குறித்து அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசனை நடத்தி ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இனி அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிதி வழங்கி உதவ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்களுக்குத் […]

செம்மணி விவகாரம் தொடர்பில் சோமரத்ன ராஜபக்ஷ வாக்குமூலத்தில் தீர்வைத் தேடுக!

வடக்கில் இடம்பெற்ற காணாமல்போனோர் விவகாரத்திற்குப் பிரதான தீர்வாக, செம்மணி விவகாரம் தொடர்பில் கைதியாகவுள்ள முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளைத் தேட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பயிரிடப்படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாகத் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ‘ஹட்டன் பிரகடனம்’ மூலம் உத்தரவாதம் வழங்கப்பட்டதாகவும், இன்று அந்தக் காணிகளைத் தனியார் கம்பனிகளுக்கு வழங்க அரசாங்கம் முடிவு […]

கூடுவலை கடையில் தீ விபத்து: ஏ-9 வீதியின் போக்குவரத்து பாதிப்பு

கண்டி – கடுகஸ்தோட்டை, கூடுவலை பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாக விற்பனை நிலையமொன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ விபத்து காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 பிரதான வீதியின் கூடுவலை பகுதிக்கு அருகிலான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த கண்டி மற்றும் மாத்தளை தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த தீயணைப்புக் குழுவினர், தீவிரமாகச் செயற்பட்டு தீயைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இவ்விபத்தில் உயிரச்சேதங்களோ […]

மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு

வெற்றுப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையைத் தொடர்ந்து, நவம்பர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலைகளை உயர்த்தியுள்ளதாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய, 750 மில்லி லீட்டர் (ml) கொள்ளளவு கொண்ட வெற்றுப் போத்தலொன்றின் உற்பத்திச் செலவு 160 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேவேளை, 375 மில்லி லீட்டர் மற்றும் 180 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட போத்தல்களின் விலைகள் முறையே 140 ரூபாய் மற்றும் 109 ரூபாயாக உயர்ந்துள்ளன. இதன் […]

ஐ.பி.எல் ஏலத்தில் நுழைவதை மறுக்கும் ஆமிர்

எதிர்வரும் இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) ஏலங்களில் உள்நுழையும் எந்த எண்ணமுமில்லை என பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆமிர் பிரித்தானிய குடியுரிமையைப் பெற்றிருந்தார். பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல்லில் பங்கேற்க அனுமதிக்கப்படாத நிலையில் ஏலத்தில் ஆமிர் பங்கேற்கலாமெனக் கருதப்பட்டது. ஆரம்ப பருவகாலத்தைத் தொடர்ந்து ஐ.பி.எல்லில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்காத நிலையில், பிரித்தானிய கடவுச்சீட்டைக் கொண்டிருந்தமை காரணமாக 3 ஆண்டுகள் அஸார் மஹ்மூட் ஐ.பி.எல்லில் விளையாடியிருந்தார்.

எஸ்.பி.பட்டினத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல கோடி ரூபாய் ஹஷீஷ் பறிமுதல்!

இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக எஸ்.பி.பட்டினம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான 19.8 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருளை பொலிஸார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளியை கைது செய்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை உட்கோட்டம், எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் […]

போட்டியில் மோதலையடுத்து உயிரிழந்த வீரர்

போட்டியொன்றில் மோதலையடுத்து மாரடைப்பொன்றால் பாதிக்கப்பட்ட ஸ்பெய்னின் இரண்டாம் தரக் கழகமான டென்றீஃபேயின் முன்களவீரரான ஜெஸூஸ் டி மிகேல் செவ்வாய்க்கிழமை (03) உயிரிழந்துள்ளதாக அக்கழகம் தெரிவித்துள்ளது. அன்டோராவின் கோல் காப்பாளர் ஜெஸூஸ் ஒவோனாவுடன் திங்கட்கிழமை (02) மோதுண்டு 30 வயதான டி மிகேல் நிலைகுலைந்து வீழ்ந்தமையைடுத்து செகுண்டா பிரிவு போட்டியானது ஏழாவது மேலதிக நிமிடத்துடன் கைவிடப்பட்டிருந்தது. தனது பகுதியிலிருந்து பந்தை நோக்கி ஓடி வந்த ஒவோனா, டி மிகேலின் நெஞ்சை தனது முழங்காலால் தாக்கியிருந்தார்.

களனி பல்கலைக்கழகத்தில் போராட்டம்

ளனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், நேற்று இரவு (03) கையில் எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்திற்கு முன்பாகத் தொடங்கிய இந்தப் போராட்டத்தை, களனி பல்கலைக்கழகத்தின் பொது மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்போது, தாங்கள் எழுப்பிய எந்தவொரு பிரச்சினைக்கும் அரசாங்கம் இதுவரை தீர்வு வழங்கவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அரசாங்கம் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக நிர்வாகம் அரசாங்கத்தின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் […]

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

நவம்பர் மாதம் 12 திகதி முதல் 28ஆம் திகதிக்குள் மூன்று எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது எல்பிஜி முனையம் வழியாக உள்நாட்டு சந்தைக்கு எரிவாயுவை வழங்குவதற்கான தேவையான ஒப்புதல்களை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. தற்போதைய எரிவாயு விநியோக தடையால் உள்நாட்டு நுகர்வோர் மற்றும் வர்த்தக சமூகம் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு அந்நிறுவனம் தனது மனமார்ந்த வருத்தத்தினையும் தெரிவித்துள்ளது. […]

சிவாஜிலிங்கம் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம், உடல்நலக் குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நேற்று செவ்வாய்க்கிழமை (3) திடீரென மீண்டும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர், பின்னர் […]