சிவாஜிலிங்கம் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம், உடல்நலக் குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நேற்று செவ்வாய்க்கிழமை (3) திடீரென மீண்டும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர், பின்னர் […]

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளபோதிலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை!

இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும், அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான பல விடயங்களை இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்ததாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லிக்கு விஜயம் செய்து, […]

பாடசாலை கால அட்டவணையில் மாற்றம்

திய கல்விச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்கு இணையாக, பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிப்பது தொடர்பாகக் கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இச்சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டச் சீர்திருத்தங்கள் 2026 ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் தொடங்கப்பட்டுள்ளதுடன், 2027 ஆம் ஆண்டில் 2 ஆம் மற்றும் 6 ஆம் தரங்களுக்கும், 2028 ஆம் ஆண்டில் 3 ஆம் மற்றும் 7 ஆம் தரங்களுக்கும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 2029 ஆம் ஆண்டில் […]

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை 

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு […]

தீபாவளிப் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

தீபாவளிப் பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தீபாவளி மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஆண்டுகளை போலவே […]