முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் சிரேஸ்ட அரசியல்வாதிகளின் வீடுகளிற்கு சென்று அதிகாரிகள் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடைமுறையை எதிர்வரும் காலத்தில் பின்பற்றப்போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளும் சிரேஸ்ட அதிகாரிகளும் விசாரணைக்காக அழைக்கப்பட்டால் சட்டஅமுலாக்கல் பிரிவினர் முன்னிலையில் ஆஜராகவேண்டும் என தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
அரசியல் அந்தஸ்த்து அல்லது பதவிகளை பொருட்படுத்தாமல் சட்டத்தினை அனைவருக்கும் சமமாக பயன்படுத்தும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பினை இந்த மாற்றம் வெளிப்படுத்துகின்றது.
அரசநிறுவனங்களினது சுயாதீனத்தை உறுதி செய்வதற்கும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நீதித்துறை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற அமைப்புகள் தற்போது சுதந்திரமாக செயற்படுகின்றன,
நாட்டிலிருந்து தப்பியோடியவர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவருவதற்கு சர்வதேச பொலிஸ் போன்ற சர்வதேச கட்டமைப்புகளை பயன்படுத்துவோம்
சர்வதேச போதைப்பொருள் கும்பல்களை சேர்ந்த 74 பேர் ஏற்கனவே வெளிநாடுகளில் கைதுசெய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளனர் என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.