முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை (14) யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
சபை அமர்வின் முதல் நிகழ்வாக, முள்ளிவாய்க்கால் இன அழிப்பை சித்திரிக்கும் ஒளிப்படம் வைக்கப்பட்டு, அதன் முன்னால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலியைத் தொடர்ந்து, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு, அதன் பின்னர், வழமையான சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.