யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற இ.போ.ச. பேருந்தொன்று நேற்று மாலை
திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. வவுனியா தாண்டிக்குளத்துக்கு அண்மித்ததாக பேருந்து சென்று கொண்டிருந்த போதே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.