கண்டி – யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியின் கடுகஸ்தோட்டை, கலகல பகுதியில் திங்கட்கிழமை (15) பிற்பகல் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக கடுகஸ்தோட்டை பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாடசாலை வேனில் பயணித்த 15 மாணவ, மாணவிகளும் வேன் சாரதியும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக கடுகஸ்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மாணவர் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.