யாழில் இ.போ.சவின் சேவையை முடக்கி போராடுவோம்!

யாழில் இ.போ.சவின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்று (28) பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சிலமணி நேரம் பெரும் பரபரபு ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று காலை யாழ். மாநகர சபையின் ஊழியர்கள் குறித்த மலசல கூடத்தொகுதிக்கு நீர் இணைப்பை வழங்கும் நோக்குடன் சென்றிருந்த நிலையில் அவர்கள் இ.போ. சபையினரால் தடுக்கப்பட்டதை அடுத்தே […]
சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப்பொருள் விநியோகம்!

கெப்பட்டிபொல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெலும்வல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட திடீர் வீதித் தடை சோதனையின் போது, கார் ஒன்றில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தும்மோதர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (27) காலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சோதனையில், சந்தேகநபரால் பயன்படுத்தப்பட்ட காருடன் 245 கிராம் ஐஸ் போதைப்பொருள்,206 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட […]
நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள் கைப்பற்றல்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஷார்ஜாவிலிருந்து நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஷார்ஜாவிலிருந்து எயார் அரேபியா விமானம் மூலம் இலங்கை வந்த 32 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய வருகை முனையத்தில் கடமையில் இருந்த சுங்க அதிகாரிகளைக் கண்டதும் அச்சமடைந்த குறித்த நபர், தனது பயணப் பொதிகளை அங்கேயே கைவிட்டுவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளார். […]
திருகோணமலை – மாவிலாற்றில் வெடிக்காத மோட்டார் குண்டுகள் மீட்பு

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலாறு பகுதியில், வெடிக்காத நிலையில் இருந்த 61 ரகத்தைச் சேர்ந்த இரண்டு மோட்டார் குண்டுகள் இன்று சனிக்கிழமை (28) காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். மாவிலாறு குளத்தின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தபோது, இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அனுமதி பெறப்பட்டதையடுத்து, குறித்த மோட்டார் குண்டுகளை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் […]
ஒரு நாட்டை ஆளும்போது உலகில் நடப்பவற்றை புரிந்துகொள்ள வேண்டும் – சஜித் பிரேமதாச

பல துறைகளில் நாடு கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகின்றது. மத்திய கிழக்கு போர் உருவாவதற்கு நாம் காரணமாக இல்லாவிட்டாலும், இந்த போர் நிலை பல சவால்களை எமக்கும் உருவாக்கியுள்ளது. இந்தப் போர் 3 வாரங்களுக்கு முன்பு தான் ஆரம்பித்தது என்று பலர் நினைத்தாலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்தே அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். களனிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்களைத் தெளிவூட்டும் சந்திப்பொன்றில் […]
”வளமான நாடு அழகான வாழ்க்கை”; தோட்டப்புற வைத்தியசாலைகள் புனரமைக்கபடும்

‘வளமான நாடு அழகான வாழ்க்கை” என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பும் வகையில் மலையகத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் வைத்தியசாலைகளை புனரமைக்கும் பணிகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளை புனரமைப்பதற்காக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஹப்பகஸ்தென்ன தோட்ட வைத்தியசாலையும் புனரமைப்பதற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 45 இலட்சம் […]
உணவு பாதுகாப்பு மற்றும் முதலீடுகள் குறித்து விசேட கலந்துரையாடல்

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வர்த்தக அமைச்சில் நேற்று (27) நடைபெற்ற இச்சந்திப்பில், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்பு ஆலோசகர் மைத்ரேய் குல்கர்னி உள்ளிட்ட குழுவினரும், வர்த்தக அமைச்சின் சார்பில் அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, கலாநிதி சாந்த ஜயரத்ன மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைப் பொதுச்சபையின் (CWE) தலைவர் கோசல வில்பாவ ஆகியோரும் கலந்துகொண்டனர். இரு […]
விசேட போக்குவரத்து நடவடிக்கை
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் முதலாம் ஆம் திகதி முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர அறிவித்துள்ளார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்களின் நடமாட்டம் அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, மேலதிக போக்குவரத்து மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். குறிப்பாக கொழும்பு மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள புகையிரத நிலையங்கள் மற்றும் […]
பாகிஸ்தானில் நாளை முதல் பேச்சுவார்த்தை!

ஒரு மாத காலமாக நீடிக்கும் ஈரான் போர் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக சவூதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் பாகிஸ்தானில் நாளை (29) முதல் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்தப் பேச்சுவார்த்தைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் (30) ஆகிய இரு தினங்கள் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளன. இந்த இருநாள் பேச்சுவார்த்தைகளின் போது, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து நான்கு நாடுகளினதும் […]
ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

ஷ்ய கூட்டமைப்பின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரே ருடென்கோ (Andrey Rudenko) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். எதிர்வரும் 31ஆம் திகதி அவர் நாட்டை வந்தடைவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய பிரதி அமைச்சர், இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.