இலங்கைப் பொலிஸ் சேவை; அத்தியட்சகர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

இலங்கைப் பொலிஸ் சேவையின் உப சேவை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (சட்ட உத்தியோகத்தர்கள்) பதவிக்கு சட்டத்தரணிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கால நீடிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மார்ச் 27ஆம் திகதி வெளியிடப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, உப சேவை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (சட்ட உத்தியோகத்தர்) பதவிக்கு 100 சட்டத்தரணிகள் […]

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு: கேதீஸ்வரன் சாட்சியம்!

யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அவர்களால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு, நேற்றைய தினம் (27) பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பணிப்பாளர் கேதீஸ்வரன் சாட்சியமளித்தார். கடந்த 04.07.2024 அன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா பணியாற்றிய போது, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலி நிவாரணிகளை போதைப்பொருட்களாக […]

நுவரெலியாவில் லொறி விபத்து: ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

நுவரெலியா குறுக்கு வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று (28.03.2026) நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு குழாய் கிணறு தோண்டும் பணிக்காக வந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. லொறியின் தடை செயலிழந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், விபத்து நேரத்தில் லொறியில் ஐந்து பேர் பயணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் […]

தமிழ் இன அழிப்புக்கு திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகின்றதா? – வாசுகி சுதாகரன்

தமிழர் கலாசாரத்தை சிதைப்பதற்கும் இன அழிப்புக்கும் திட்டமிட்ட வகையில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுகின்றதா? என ஈழத்தமிழர் மகளிர், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் பணிப்பாளர் வாசுகி சுதாகரன் தெரிவித்துள்ளார். இன்று(28-03-2026) கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிடுகையில், கிழக்கு மாகாணத்திலே பெண்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற கொலை கொள்ளை சம்பவங்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் சிறுவர் கடத்தல் என்பன தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவ பீட விரிவுரையாளரின் கொலைக்கு […]

சந்தையில் எவ்வித தட்டுப்பாடுமின்றி கோழி இறைச்சி விநியோகம்

புத்தாண்டு காலத்தில் சந்தையில் எவ்வித தட்டுப்பாடுமின்றி கோழி இறைச்சியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் அபாயம் காணப்பட்டபோதிலும், அதனை 1,250 ரூபாய் விலையில் பேணுவதற்கு திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார். அதேவேளை, உலக சந்தையில் விலங்கு தீவனங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் […]

இந்த வருடம் இலங்கையின் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களுமே அதிகளவில் இவ்வாறான விபத்துக்களுக்கு உள்ளாகியுள்ளதாக போக்குவரத்துப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்தார். கடந்த வருடத்தின் தரவுகளை நோக்கும்போது, வீதியில் பயணித்த பாதசாரிகளில் 31 சதவீதமானோர் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதனடிப்படையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் […]

போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது

பஞ்சிகாவத்தை பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பஞ்சிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 710 கிராம் 603 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 934 கிராம் 575 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 300 கிராம் 575 மில்லிகிராம் ‘ஹேஷ்’ போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. […]

நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில்களுக்கு புதிய கியூ.ஆர் முறைமை

விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய வாகனமற்ற எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய கியூ.ஆர் முறைமையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா இது குறித்து கருத்து தெரிவிக்கையில், வாகனங்கள் இன்றி எரிபொருள் தேவைப்படும் தரப்பினருக்காகவே இந்த விசேட கியூ.ஆர் முறைமை வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது எரிபொருள் தேவையை கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகத்தில் உறுதிப்படுத்தி, […]

கடும் வறட்சி; காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி

மலையகத்தில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வற்றி வருகின்றது. இதற்கமைய, நோர்டன் விமலசுரேந்திர மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் வழங்கும் காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் இன்று (28) 40 அடி வரை குறைவடைந்துள்ளது. தற்போதுள்ள நிலையில் நீர்மட்டம் மேலும் ஒரு அடி குறையுமானால், விமலசுரேந்திர மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, மஸ்கெலியா மவுசாக்கலை, […]

கொக்குத்தொடுவாயில் அத்துமீறிய உப்பளம்; ரவிகரன் அரசுக்கு அனுப்பிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அலுவலகம் பணிப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளிப்பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் பெரும்பான்மை இனத்தவரால் அத்துமீறி உப்பளம் அமைக்கும் முயற்சியைத் தடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அனுப்பிவைக்கப்பட்டுள் கடிதத்திற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் அலுவலகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறித்த அத்துமீறி உப்பளம் அமைக்கும் முயற்சியைத் தடுக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (07) அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கடிதம் […]