இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு: கேதீஸ்வரன் சாட்சியம்!

யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அவர்களால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு, நேற்றைய தினம் (27) பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பணிப்பாளர் கேதீஸ்வரன் சாட்சியமளித்தார்.

கடந்த 04.07.2024 அன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா பணியாற்றிய போது, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலி நிவாரணிகளை போதைப்பொருட்களாக மருந்தகங்கள் ஊடாகப் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். இந்தக் கூற்றுத் தொடர்பாகவே இந்த அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கின் ஆரம்ப விசாரணைகளின் போது, குறித்த காணொளி தன்னாலேயே பதிவேற்றம் செய்யப்பட்டதையும், அந்தத் தகவல் தன்னாலேயே கூறப்பட்டதையும் அர்ச்சுனா ஏற்றுக்கொண்டிருந்தார். மேலும், அக்குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நீதிமன்றில் நிரூபிப்பதாகத் தமது தரப்பு நியாயத்திலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த வைத்தியர் கேதீஸ்வரன், தமது பணிக்காலத்தில் வலி நிவாரணிகள் மருத்துவச் சீட்டு இன்றி வழங்கப்படுவது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்தும், அது தொடர்பில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

மருந்தகங்கள், அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் சான்றாதாரங்களுடன் விளக்கமளித்தார்.

விசாரணையின் போது அர்ச்சுனாவினால் வெளியிடப்பட்ட காணொளி நீதிமன்றில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. இதன்போது அர்ச்சுனாவும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். சாட்சியமளித்த பணிப்பாளர் கேதீஸ்வரன், தமது 35 ஆண்டுகால மருத்துவச் சேவையில் எவ்விதக் களங்கமும் ஏற்படாத நிலையில், திட்டமிட்டு முன்வைக்கப்பட்ட இக்குற்றச்சாட்டானது தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக இந்தக் காணொளி வெளியானதன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து பலர் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

அடுத்த அமர்வின் போது பணிப்பாளர் கேதீஸ்வரன், அர்ச்சுனாவின் சட்டத்தரணியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். பணிப்பாளர் கேதீஸ்வரன் சார்பில் சட்டத்தரணிகளான க. குமணன், த. தினேஷ், சி. அபினாஸ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகியிருந்தார். அர்ச்சுனா சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனின் அறிவுறுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி சி. கனகசிங்கம் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்