கொக்குத்தொடுவாயில் அத்துமீறிய உப்பளம்; ரவிகரன் அரசுக்கு அனுப்பிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அலுவலகம் பணிப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால் வெளிப்பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளில் பெரும்பான்மை இனத்தவரால் அத்துமீறி உப்பளம் அமைக்கும் முயற்சியைத் தடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அனுப்பிவைக்கப்பட்டுள் கடிதத்திற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் அலுவலகத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அத்துமீறி உப்பளம் அமைக்கும் முயற்சியைத் தடுக்குமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை (07) அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கடிதம் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் பிரதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்திற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு பிரதமர் அலுவலகத்தால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு பகுதியில் அமைந்துள்ளதும் நில அளவையாளர் நாயகம் அவர்களால் பேணப்பட்டுவரும் TOPO PP70 இலக்க நில அளவை வரைபடத்தின் Inset 17, 18, 19 ஆகிய பகுதிகளுக்குரிய தமிழ் மக்களின் பூர்வீக தனியார் வயல் காணிகளையும் அதற்கு இடைப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களையும் மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் ஏற்படும் அபாய நிலை தோன்றியுள்ளது.

எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய உப்பளம் அமைக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அன்று கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அத்தோடு குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் ஆகியோருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரால் பிரதியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொக்குத்தொடுவாயில் தனியார்காணிகளில் அனுமதியின்றி உப்பளம் அமைக்கப்படும் செயற்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரமரின் அலுவலகத்திலிருந்து மகாவலி அதிகாரசபை பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் மக்கள் தொடர்புக்குரிய சிரேஷ்ட உதவிச் செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள PMO/PRD/12/25/227448 என்னும் இலக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயிலுள்ள தனியார் காணிகளில் அனுமதியின்றி உப்பளம் அமைப்பது தொடர்பாக வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 2026.03.07 திகதி பிரதமருக்கான பிரதியோடு தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம், தங்களின் மேலான கவனத்திற்கும் தேவையான நடவடிக்கைக்கும் அனுப்பப்படுவதாக அக்கடிதத்தில் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர் அழுத்தத்தினையடுத்து குறித்த உப்பளம் அமைக்கப்படும் இடத்தின் நிலஉரிமை தொடர்பில் ஆராயும்வரை குறித்த உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் ஏற்கனவே 10.03.2026ஆம் திகதி மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றினை அனுப்பிவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

725006167_122271192422059693_1707214849349142602_n

காணிகளை விடுவிக்ககோரி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டமயிலிட்டி மக்கள் -ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு

June 15, 2026

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர்,

Ranil

இலங்கையின் பொருளாதாரம் விரைவில் முற்றாக வீழ்ச்சியடையும்”: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

June 15, 2026

கொழும்பு: இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டதுடன், இன்னும் சில காலத்திற்குள் அது முற்றாக முடங்குவதை (Complete crash) காணக்கூடியதாக

Chilaw-Hospital

சிலாபம் மருத்துவமனையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: இருவர் காயம், சந்தேகநபர்கள் கைது

June 15, 2026

சிலாபம்: சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையில் (Chilaw District General Hospital) நேற்றிரவு (14) இருவர் மேற்கொண்ட தாக்குதலில், அங்கு

722205425_2516904032157267_6855962867046714642_n

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பை வலியுறுத்தி போராட்டம்!

June 15, 2026

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று காலை யாழ்

Sarath

இன்று இருப்பது ஒரு கார்ட்டூன் எதிர்க்கட்சி”: மார்ஷல்சரத் பொன்சேகா கருத்து!

June 15, 2026

ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளுக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்கி வரும் தற்போதைய அரசாங்கத்திற்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்குவதாகப் மார்ஷல் சரத் பொன்சேகாகுறிப்பிட்டுள்ளார்.

dead'

புலத்சிங்களவில் உள்ள ஆடைவிற்பனை நிலையத்திற்குள் தம்பதியினர் சடலங்களாக மீட்பு!

June 15, 2026

புலத்சிங்கள: களுத்துறை மாவட்டம், புலத்சிங்கள பகுதியில் உள்ள ஆடைவிற்பனை நிலையம் (Clothing store) ஒன்றிற்குள் கணவன் மற்றும் மனைவி ஆகிய

suresh11

சுரேஷ் சல்லேயை தினமும் சந்திக்க சட்டத்தரணிக்கு சிஐடி மறுப்பு: குடும்பத்தினருக்கு அனுமதி!

June 15, 2026

கொழும்பு: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டிருந்த போது முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தற்போது கொழும்பு தேசிய

722205477_122297438792194641_4474599319675497240_n

ரொறன்ரோ டென்போர்த் பகுதியில் தொடர் தாக்குதல்: நபர் மீது 12 குற்றச்சாட்டுகள் — பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பொலிஸார்

June 15, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள கொக்ஸ்வெல் அவென்யூ (Coxwell Avenue) மற்றும் டென்போர்த் அவென்யூ (Danforth Avenue) சந்திப்புப்

wi

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை

June 15, 2026

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்

j

உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

June 15, 2026

வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் துரதிர்ஷ்டவசமாக அதன்

Elnino

இலங்கையைப் பாதித்துள்ள எல் நினோ காலநிலை

June 15, 2026

இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ காலநிலை நிலைமை காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில்

chemma

சோமரத்ன ராஜபக்ஷ செம்மணி படுகொலை சாட்சியாளர் மாத்திரமேயன்றி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்பில்லாதவர் – சோமரத்னவின் மனைவி

June 15, 2026

டசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது பற்றி இதற்கு