டிஜிட்டல் தளத்துக்காக பிரம்மாண்ட பட்ஜட்டில் தயாரான ‘முத்து என்கிற காட்டான்’

பட மாளிகையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் படைப்புகளுக்கு நிகராக டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் படைப்புகளை பார்த்து பாராட்டும் டிஜிட்டல் தள ரசிகர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக மின்னும் நடிகர்களும் இணைய தொடர்களில் நடிப்பதற்கு முன்னுரிமையும் , முக்கியத்துவமும் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் சேதுபதி முத்து என்கிற காட்டானாக நடித்திருக்கும் இணைய தொடர் – ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் இன்று […]

‘செல்வந்தர் என்பவன் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவரே அதுவே ‘கார் மேனி செல்வம்’ திரைப்படம் – சமுத்திரக்கனி

”மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ..! அவர்கள் தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள்தான் மிகவும் சந்தோஷமானவர்கள். இதை சொல்ல வரும் சினிமா தான் கார் மேனி செல்வம்” என அப்படத்தின் நாயகனான சமுத்திரக்கனி தெரிவித்திருக்கிறார். இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, லட்சுமி பிரியா சந்திர மௌலி, கௌதம் வாசுதேவ் மேனன், அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா , அர்ஜுனன், கோதண்டம் உள்ளிட்ட பலர் […]

‘டார்க் ஜெயன்ட் ‘திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை சோனியா அகர்வால் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘டார்க் ஜெயன்ட்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இந்திய மாநிலங்களவை உறுப்பினரான கமல்ஹாசன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் கே. எஸ். கிஷன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டார்க் ஜெயன்ட்’ திரைப்படத்தில் சோனியா அகர்வால் , அயலி மதன் , ஜோவிட்டா லிவிங்ஸ்டன், அமுதவாணன் , லிவிங்ஸ்டன், கே. பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கீத் மணி கோபால் ஒளிப்பதிவு செய்திருக்கும் […]

நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள்

நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கும் வகையிலான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை இளைஞர் சமூகத்தின் தொழில்நுட்பத் திறன்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் ‘உலக ரோபோ ஒலிம்பியாட்’ தேசியப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இம்முறை போட்டிகளில் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளிலிருந்து 66 அணிகள் பங்கேற்றன. இது கடந்த வருடத்துடன் […]

நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது!

நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், எரிபொருள் விநியோகம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால் மின்சாரத் தடையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டார். அத்துடன், வரும் நாட்களில் மேலும் பல எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் மாத நடுப்பகுதி வரை டீசல் விநியோகத்தை எவ்வித […]

குருநகரில் கத்திக்குத்து; இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குருநகர் பகுதியில் இரு இளைஞர்களும் போதையில் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட வேளை ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மற்றையவர் மீது சரமாரியாக குத்தியுள்ளார். அதில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை […]

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கப்படுவதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்வடைந்து, அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் Kiel உலகப் பொருளாதார ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி, உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை பல பொருட்களின் விலைகள் இவ்வாறு உயரக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில், உணவுப் பொருட்களின் விலை உயர்வால் மோசமாகப் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் […]

நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி இன்று சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen Shah) தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் இடம்பெற்ற ‘Gen Z’ இளைஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. அந்த போராட்டங்களின் […]

அதிமுக கூட்டணியில் இயக்குநர் சுந்தர் சி

திமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் மதுரை மத்திய தொகுதியில் அக்கட்சியின் சார்பில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்குவார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அன்று ஒரே கட்டமாக தமிழக முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அக்கூட்டனையில் இடம்பெற்றிருக்கும் கல்வியாளர் ஏ சி சண்முகம் தலைமையிலான புதிய […]

இன்டிகோ நிறுவனத்தின் ஊடாக டெல்லி – கொழும்பு நேரடி விமான சேவை

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இன்டிகோ, டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையே நேரடி புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது வான்வழித் தொடர்புகளை மேலும் பலப்படுத்துகிறது. இந்த விமான சேவை எதிர்வரும் மார்ச் மாதம் 29 திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. வாரத்திற்கு ஆறு நேரடி விமானங்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். இச்சேவைக்காக A320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படும், இது பயணிகளுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை வழங்கும். இந்தியா மற்றும் இலங்கை இடையே […]