நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது!

நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், எரிபொருள் விநியோகம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதால் மின்சாரத் தடையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்டார். அத்துடன், வரும் நாட்களில் மேலும் பல எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் மாத நடுப்பகுதி வரை டீசல் விநியோகத்தை எவ்வித சிக்கலுமின்றி முன்னெடுக்க முடியும் என்றும், 92 மற்றும் 95 ரக பெற்றோல் விநியோகம் ஜூன் மாத ஆரம்பம் வரை பாதுகாப்பாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா:

“தற்போது இரண்டு கப்பல்கள் தரையிறக்கப்படுகின்றன. 27ஆம் திகதி வந்த கப்பலில் 30,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோலும், 5,000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலும் கொண்டுவரப்பட்டுள்ளன. நாளை வரும் IOC கப்பலில் தலா 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 92 ரக பெற்றோல் வருகின்றன. 28, 29ஆம் திகதிகளில் வரவிருந்த 37,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல் முன்னதாகவே வந்து தற்போது தரையிறக்கி முடிக்கப்பட்டுள்ளது.

எமக்கு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்குத் தேவையான எண்ணெய் பெறுவதில்தான் சிக்கல் இருந்தது. சுத்திகரிப்பு நிலையத்திலிருந்தே எமக்குத் தேவையான அதிகப்படியான டீசல் மற்றும் எரி எண்ணெய் தயாரிக்கப்படுகின்றன. எரி எண்ணெய் கிடைக்காவிடில் மின்சாரத் தடைக்குச் செல்ல வேண்டி வரும் என்பதால், அதற்கான ஏலங்களைக் கோரியுள்ளோம். அதன்படி, ஏப்ரல் 2 மற்றும் 4ஆம் திகதிகளுக்கு இடையில் 32,000 மெட்ரிக் தொன் டீசலும், 8,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளும் வரவுள்ளன.

அதனைத் தொடர்ந்து 6 மற்றும் 7ஆம் திகதிகளில் 37,500 மெட்ரிக் தொன் டீசலும், 7 மற்றும் 8ஆம் திகதிகளில் 32,000 மெட்ரிக் தொன் டீசலும் 5,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் வரவுள்ளன. 10, 11ஆம் திகதிகளில் 30,000 மெட்ரிக் தொன் விமான எரிபொருளும், 18, 19ஆம் திகதிகளில் சினோபெக் நிறுவனத்தின் கப்பல் மூலம் தலா 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 92 ரக பெற்றோலும் வரவுள்ளன.

மின்சார உற்பத்திக்காக 12, 13ஆம் திகதிகளில் 30,000 மெட்ரிக் தொன் எரி எண்ணெய் அடங்கிய கப்பலும், 16, 17ஆம் திகதிகளில் 35,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோலும் வரவுள்ளன. மீண்டுமொரு கப்பல் 21, 22ஆம் திகதிகளில் 20,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலுடன் வரவுள்ளது. 24, 25ஆம் திகதிகளில் 37,000 மெட்ரிக் தொன் டீசலும், 29, 30ஆம் திகதிகளில் 30,000 மெட்ரிக் தொன் 92 ரக பெற்றோலும் 5,000 மெட்ரிக் தொன் 95 ரக பெற்றோலும் வரவுள்ளன. ஏப்ரல் மாதத்திற்கான இந்த எரிபொருள் கப்பல்கள் அனைத்தும் எமக்குக் கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. முக்கியமாக இவை எதுவும் போர் நடைபெறும் பிராந்தியங்களிலிருந்து ஏற்றப்படுபவை அல்ல. என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

i

இலங்கை வருகிறார் இந்தியத் துணை குடியரசுத் தலைவர்

April 17, 2026

இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 2026 ஏப்ரல் 19 முதல் 20 வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வப் பயணம்

qr

நாளை நள்ளிரவு முதல் மீண்டும் QR முறைமை

April 17, 2026

நாளை (18) நள்ளிரவு முதல் பெற்றோல் வாகனங்களுக்காக மீண்டும் QR முறைமை நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”