ஒரு நாட்டை ஆளும்போது உலகில் நடப்பவற்றை புரிந்துகொள்ள வேண்டும் – சஜித் பிரேமதாச

பல துறைகளில் நாடு கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகின்றது. மத்திய கிழக்கு போர் உருவாவதற்கு நாம் காரணமாக இல்லாவிட்டாலும், இந்த போர் நிலை பல சவால்களை எமக்கும் உருவாக்கியுள்ளது. இந்தப் போர் 3 வாரங்களுக்கு முன்பு தான் ஆரம்பித்தது என்று பலர் நினைத்தாலும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்தே அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

களனிப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்களைத் தெளிவூட்டும் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு நடந்த சர்வதேச நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்திருந்தால், வினைத்திறமையான அரசாங்கம் இதைவிட மோசமான போர்ச்சூழலொன்று வரும் என்று முன்கூட்டியே கணிக்க வேண்டியிருந்தும் இந்த அரசாங்கம் அதை செய்யவில்லை.

ஈரான் மீதான தாக்குதல், வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்க இராணுவம் கைது செய்தது, கியூபாவில் நடந்த உள்நாட்டு பிரச்சினைகள், எண்ணெய் கப்பல்கள் நுழைய அனுமதிக்காமல் இருந்தமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்தன.

ஒரு நாட்டை ஆளும்போது உலகில் நடப்பவற்றை புரிந்துகொள்ள வேண்டும். சூழ நடக்கும் விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ட்ரம்ப் ஜனாதிபதியின் சர்வதேசக் கொள்கையை பார்க்கும்போது மத்திய கிழக்கு போர் நிலையை முன்கூட்டியே கணித்திருக்க முடியும். ஆனால் இந்த அரசாங்கம் அதை செய்யவில்லை.

தரமற்ற நிலக்கரி காரணமாக நுரச்சோலை மின் நிலையம் கூட நியமிக்கப்பட்ட அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் அரசாங்கம் அலட்சியமாக இருப்பதால் நாட்டு மக்களும் நாடும் மிகப்பெரிய ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த அரசாங்கம் இறக்குமதி செய்தது தரமற்ற நிலக்கரியே என்று நுரச்சோலை மின் நிலையத்தின் நேரடி அறிக்கைகள் காட்டுகின்றன. அரசாங்கம் இவை தரமற்ற நிலக்கரி இல்லை என்று கூறினாலும், நேற்றும் 113 மெகாவோட் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இதனால் எரிபொருள் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதால் மின் கட்டணம் அதிகரிப்பும் எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படும். விரைவில் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது .

தரமற்ற நிலக்கரி திருட்டை மூடி மறைப்பதற்கே மின் கட்டணத்தை அதிகரிக்கப் பார்க்கின்றனர். எரிபொருள் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதால் ஏற்படும் மேலதிக செலவை மின்சார நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த தரமற்ற நிலக்கரியால் குறைந்த மின்சாரம் உற்பத்தியாவதுடன் மின் நிலைய உபகரணங்களுக்கு சேதமும், சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளிட்ட பல பெரும் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன

எதிர்க்கட்சி கருத்துக்களை முன்வைக்கும்போது அதற்கான இடத்தையும் தடுக்க அரசாங்கம் முயல்கிறது. எதிரக்கட்சியாக நாம் கருத்துக்களை முன்வைக்கும் போது சேறுபூச மட்டுமே இந்த அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்த விடயமாக காணப்படுகின்றன.

நாட்டில் கடுமையான பிரச்சினைகள் எழுந்து காணப்படும் நிலைக்கு மத்தியிலும் புதன்கிழமை பாராளுமன்ற அமர்வுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி முன்வைக்கும் கருத்துக்களை இந்த அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை.

இந்தியா எண்ணெய்க்கு விதித்த வரிகளை நீக்கவும், சில வரிகளை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளன. தென் கொரியாவும் இதுபோன்ற நிவாரணங்கள் அந்நாட்டு மக்களுக்கு வழங்குகிறது. ஆனால் நமது நாட்டு ஜனாதிபதியும் அரசாங்கமும் தேர்தல் காலத்தில் கூறியவாறு எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அதே விலைகளுக்கு பொற்றோலையும் டீசலையும் மக்களுக்கு பெற்றுத் தருவோம் என தேர்தல் மேடைகளில் பிரஸ்தாபித்தனர். ஆனால் செயலில் இது நடந்தபாடில்லை.

இப்போது விவசாயிகளும் கடுமையான சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். பெரும் போகத்தில் 8 இலட்சம் ஹெக்டேர் பயிரிடப்படுகின்றன. எதிர் வரும் சிறு போகத்தில் 5 இலட்சம் ஹெக்டேரில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படும்.

நீர் தட்டுப்பாட்டால் இது 5 இலட்சத்திற்கு கீழான மட்டத்திற்கு போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்போது கூப்பன்களிலும் விவசாயிகளுக்கு எரிபொருள் கிடைத்தபாடில்லை .

போதுமான உரம் நாட்டில் இல்லை. யூரியா விலை ஒரு மெட்ரிக் டொன் முன்பு 400 டொலராக காணப்பட்டது. இப்போது 700 ஆகியுள்ளது. ரூ.9500 ஆக இருந்த உர மூட்டை ரூ.15000 தாண்டியுள்ளன.

எனவே இப்போதாவது அரசாங்கம் நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான உரத்தைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உரத் தட்டுப்பாடு ஏற்பட்டால் விவசாய உற்பத்திகள் குறையும். விளைச்சலும் குறையும். இதனால் உணவுப் பாதுகாப்புக்கு கடும் அடி விழும். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் எதிர்க்கட்சியின் யோசனைகளை நிராகரித்து, சேறு பூசி, விமர்சித்து வருகின்றது. நாட்டு மக்கள் கடைசியில் இந்த அரசாங்கத்தின் அலட்சியத்தால் நிராதரவாகிவிடுவார்கள்.

மின் வெட்டு தொடர்பில் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளன. ஏப்ரல், ஜூன், ஜூலை மூன்று மாதங்களில் பல மின் நிலையங்கள் பராமரிப்புக்காக செயலிழக்கப்படுவதால் இரவில் மிக அதிக தேவை இருக்கும்போதும் மின்சாரத்தைத் துண்டிக்க நேரிடும்.

இதற்கு காரணம் தரமற்ற நிலக்கரி பயன்பாடு என்றும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வந்த அனைத்து கப்பல்களிலும் தரமற்ற நிலக்கரி என்று நுரச்சோலை மின் நிலையத்தின் நேரடி அறிக்கைகளில் தெரிகிறது. குடிமக்களாக இந்த விடயங்களை அறிந்திருக்க வேண்டும்.

2019 இலும் 2024 இலும் மக்கள் ஏமாற்றப்பட்டனர். அசீமிதமான அழுத்தத்திற்கும் துயரத்திற்கும் மக்கள் ஆளாகியுள்ளனர். இந்த நேர்மையற்ற வீரர்கள் உண்மையான வீரர்கள் அல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்ட பொய்யான வீரர்கள் ஆவர். நாட்டிற்கு நேர்மையான வலுவான தலைமைத்துவமொன்று அவசியம்.

இப்போது நாட்டில் ஆடைத் தொழிற்சாலைகளும் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்படுகின்றன. ரணசிங்க பிரேமதாச காலத்தில் உருவாக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளும் கூட இப்போது மூடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

மூடப்பட்ட இந்த தொழிற்சாலைகள் நமது நாட்டை விட்டு ஏனைய நாடுகளில் இயக்கப்பட்டு வருகின்றன. 2019 இல் பெண்களின் சுகாதாரம் தொடர்பில் பேசியபோது எம்மீது பலவாறு சேறுபூசினர்.

பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக ஆரோக்கியத் துவாய்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்போது இது முன்னோடி திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எம்மை விமர்ச்சித்தவர்களே இதனை முன்னெடுத்து வருகின்றனர். இதனைக் கண்டு நாம் மகிழச்சியடைகிறோம். எனவே இப்போதாவது மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகில் பல நாடுகள் நம்மை கடந்து முன்னேறி வருகின்றன.

இனி பொய் சொல்பவர்களால் ஏமாற வேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். மக்களுக்காக எடுக்கக்கூடிய எந்த நல்ல முடிவிற்கும் எதிர்க்கட்சி ஆதரவு வழங்கும்.

உர சிக்கலை தீர்க்க உரங்களுக்கு விதிக்கப்பட்ட வெட் வரியை நீக்கவும், உர மானியத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திறைசேரியில் மேலதிக கையிருப்பில் காணப்படும் பணத்தை பயன்படுத்தி நாட்டு மக்கள் மீதுள்ள வரிச்சுமையை நீக்கி மக்களுக்கு நிவாரண தொகுப்பை அறிமுகப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

sr

வடக்கு மாகாண விளையாட்டுத்துறை தேவைகளை விரைவாக முன்வைக்க வேண்டும்!

June 13, 2026

விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க கோரிக்கைகளை விரைவாக முன்வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு

s

முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு யாழ்.பல்கலைக்கழகத்தில்…

June 13, 2026

முதலாவது பன்னாட்டு தமிழிசை ஆய்வு மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வானது இன்றையதினம்(13) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் நடைபெற்றது. இன்றைய

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 13, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

arrestt

சிறுவர் துஷ்பிரயோகம்-வான்கூவரில் பெண் ஒருவர் போலீஸாரால் கைது!

June 13, 2026

குழந்தை சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் (Child Exploitation Offences) தொடர்பான விரிவான விசாரணைக்குப் பின்னர், பெண் ஒருவரை போலீஸார்

723904451_1420449476781494_4012668450373987547_n

மிசிசாகா பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரைக் கண்டுபிடிக்க போலீஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

June 13, 2026

மிசிசாகா (Mississauga) பகுதியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வரும் சந்தேக நபரின் புதிய புகைப்படம் ஒன்றை

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்