முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனையின் குறைபாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேரடி ஆய்வு

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ துரைராசா ரவிகரன் அவர்கள் இன்று (16.06.2026) முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்குள்ள வளக்குறைபாடுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தரவு சேகரிப்புகளின் தொடர்ச்சியாக மேற்கொண்ட இந்த விஜயத்தின் போது, மருத்துவமனையின் அமைவிடம், கட்டிட வசதிகள், ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைகள் நேரடியாக பார்வையிடப்பட்டதுடன் மருத்துவப் பொறுப்பதிகாரியுடன் விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதேச மருத்துவமனைகளின் குறைபாடுகள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நோக்கில், 17.09.2025 அன்று வள மேம்பாட்டு தரவு கோரல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு 02.04.2026 அன்று கிடைத்த பதிலில், முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனையின் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாகவே இன்றைய நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது குறித்த மருத்துவமனை தற்காலிக கட்டடத்தில் இயங்கிவருவதுடன், நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர் பிரிவு, பஞ்சகர்மா சிகிச்சை பிரிவு மற்றும் மூலிகைத் தோட்டம் போன்ற அத்தியாவசிய வசதிகளுக்கான தேவை இருந்தபோதிலும் இடவசதி பற்றாக்குறை காரணமாக வினைத்திறனான சேவையளிப்பில் சவால்கள் நிலவுவதாக மருத்துவப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் 7,575 வெளிநோயாளர்களும் 751 தொடர் சிகிச்சை (Clinic) நோயாளர்களும் சிகிச்சை பெற்றுள்ளனர். மாத சராசரியாக 700 நோயாளர்கள் வருகை தந்துள்ளனர். 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 3708 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன், இம்மாதம் 15ஆம் திகதி வரை 445 பேர் வருகை தந்துள்ளனர்.
மேலும், விடுதி வசதிகளுடன் இயங்க வேண்டிய இம்மருத்துவமனை தற்போது வெளிநோயாளர் சேவையுடன் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இயங்குவதால், நீண்டகால சிகிச்சை, தங்கியிருந்து சிகிச்சை பெறுதல் மற்றும் நோயாளர் கண்காணிப்பு போன்ற தேவைகளில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில், அனுமதிக்கப்பட்ட 13 பணியிடங்களில் தற்போது மருத்துவப் பொறுப்பதிகாரி ஒருவரும் இரு பணியாளர்களுமாக (Labourer) மொத்தம் 03 பேர் மட்டுமே பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பதிலீடு இன்றி விடுவிக்கப்பட்ட சுதேச மருத்துவர்களுக்கான பணிவெற்றிடங்கள் மிகவிரைவில் நிரப்பப்படும் என சுதேச மருத்துவத்துறை ஆணையாளர் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோர் கடந்த 2026.06.03 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளதாக ரவிகரன் அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும், முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனைக்கு நிரந்தர இடவசதி ஏற்படுத்தும் நோக்கில் மாற்றுக் காணி ஒதுக்கீடு தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடுவதாகவும் மருத்துவமனையின் சேவைகளை மேம்படுத்த தேவையான ஆளணி மற்றும் உட்கட்டமைப்பு வளங்களைப் பெற உரிய மட்டங்களில் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்
4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது