கனடாவில் பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘ஈழம் சாவடி 2026’ நிகழ்வு மூன்று தினங்களுக்கு (10.07.2026, 11.07.2026 மற்றும் 12.07.2026) சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ‘பிரம்டன் கரப்ரம் ஈழம் சாவடி 2026’ தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளைக் கொண்டாடும் அழகிய கலைத் திருவிழா.
பெரும் திரளான மக்கள் கூட்டமும், அருமையான நடனம், இசை மற்றும் சுவையான பாரம்பரிய உணவுகள் என ‘ஈழம் சாவடி 2026′ விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேற்படி கரப்ரம் பல்கலாசார விழாவில் நேரலை இசை நிகழ்ச்சியை இசைக்கலைஞர்களான அக்ஷயா சிவகுமார், ராம் மஹாராஜாபுரம், சின்மயி சிவகுமார் ஆகியோர் வழங்குகின்றார்கள் என்பதோடு ஆடை அலங்காரப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் என பல அம்சங்கள் ”ஈழம் சாவடி 2026’ இல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.








