மிசிசாகா நகர மேயர் Alvin Tedjo மற்றும் முக்கிய அரச பிரமுகர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்வு!
இன்று நவம்பர் 21ஆம் திகதி தமிழீழத் தேசியக்கொடி நாளை முன்னிட்டு கனடாவின் மிசிசாகா நகரில் மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மிசிசாகா நகர மேயர் Alvin Tedjo மற்றும் ஏனைய முக்கிய அரச பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
கனடிய தேசியக்கொடி ஏற்றுதல்
🚩 தமிழீழத் தேசியக்கொடி ஏற்றுதல்
🌺 மாவீரர் வார நினைவேந்தல் ஆரம்ப நிகழ்வு
📅 திகதி: சனிக்கிழமை, நவம்பர் 21, 2026
⏰ நேரம்: மதியம் 12:30 மணி
📍 இடம்: Behind Me Media தலைமை அலுவலகம், 2283 Argentia Road, Unit 16, Mississauga, Ontario.
நவம்பர் 21 முதல் 27ஆம் திகதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்கள், சமூகப் பிரதிநிதிகள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.