கிளிநொச்சி – சாந்தபுரம் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்: நியாயமான கோரிக்கையை தடுத்தது ஏன்?

ளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் 7 பேரால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கோரியும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது; பொலிஸார் அதற்கு இடையூறு ஏற்படுத்தி, நியாயம் கோரிய மக்களின் போராட்டத்தைத் தடுத்ததன் நோக்கம் என்னவென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20.11.2026) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய சிறீதரன் எம்.பி., மேலும் பேசுகையில்;

“கிளிநொச்சி மாவட்டம் சாந்தபுரம் கிராமத்தில் பெண் ஒருவர் 16 முதல் 23 வயதுக்குட்பட்ட 7 இளைஞர்களால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அப்பெண் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 11 ஆம் திகதி (11.11.2026) இடம்பெற்ற இச்சம்பவம், கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமல்ல முழு நாட்டிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. புங்குடுதீவு வித்தியா கூட்டுப் பாலியல் படுகொலைச் சம்பவத்திற்குப் பின்னர், தற்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாந்தபுரம் மக்கள் இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நியாயம் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, பொலிஸார் அதற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். நியாயத்தைக் கோரிய போராட்டத்தைப் பொலிஸார் தடுக்கும் நோக்கம் என்ன?

கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்காகச் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பவற்றை வலியுறுத்தியே சாந்தபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், சாந்தபுரம் மக்களைக் குடியேற்றம் செய்ய இராணுவத்தினரும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மறுத்தனர். சாந்தபுரம் மக்கள் விவசாயத்தை முன்னிலைப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இம்மக்களைக் குடியேற்றம் செய்ய அப்போதைய அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தபோதிலும், அம்மக்கள் உறுதியாக இருந்தனர்.

கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் இயங்கிய ‘தினக்குரல்’ பத்திரிகையின் செயற்பாடுகளும் இம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்குப் பெரிதும் பங்களிப்புச் செய்தன. யாழ். தினக்குரல் பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர் வினோஜித், முன்பு அப்பத்திரிகையின் முழுநேர ஊடகவியலாளராக இருந்தபோது சாந்தபுரம் மக்கள் தற்காலிகமாக வாழ்ந்த இடத்திற்குச் சென்று, அவர்களின் அவல நிலைமையை வெளியிட்டு உண்மையை உலகுக்கு எடுத்துரைத்தார். இதன் பின்னரே அம்மக்கள் சாந்தபுரம் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இதன் வெறுப்பு இன்றும் பொலிஸார், பாதுகாப்புத் தரப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு மத்தியில் உள்ளது.

சாந்தபுரம் மக்கள் போருடனும், போர் வடுக்களுடனும் வாழ்ந்தவர்கள். இன்றும் இம்மக்கள் திட்டமிட்ட போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சாந்தபுரம் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் தயங்குகின்றது; பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்படுகிறார்கள்” என்றார்.

WhatsApp Image 2026-11-21 at 06.49.57

தமிழீழத் தேசியக்கொடி நாள்; மாவீரர் வார ஆரம்ப நிகழ்வு 2026

November 21, 2026

மிசிசாகா நகர மேயர் Alvin Tedjo மற்றும் முக்கிய அரச பிரமுகர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்வு! இன்று நவம்பர் 21ஆம்

Parl

இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

November 20, 2026

​​ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்

images

வடக்கின் சிறந்த பிரதிநிதியாக சிவாஜிலிங்கம் திகழ்ந்தார் – NSSP மற்றும் USP இரங்கல்

November 20, 2026

தமிழ் மக்களின் விடுதலை அபிலாசைகளை நனவாக்கும் முயற்சிகளில், தெற்கின் ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் வர்க்க இயக்கங்களுடன் இணைந்து தொடர்ந்து

keth

கீதாஞ்சலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

November 20, 2026

கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கக் காணியை கிரிஷ் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு வழங்கும் கொடுக்கல் வாங்கலில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு

thada

274 மீன்பிடி வலைகளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

November 20, 2026

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வியாழக்கிழமை (19.11.2026) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்

WhatsApp Image 2026-11-20 at 22.35.23

நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைப்பில் பொலிசாருடன் வாக்குவாதம்

November 20, 2026

நெல்லியடியில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொட்டகைகளைப் பொலிஸார் அகற்ற முற்பட்டபோது,

8

“முதல்வரை விமர்சித்த நாதக வழக்குரைஞர் மீதான வழக்கு ரத்து!” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

November 20, 2026

சென்னை: முதல்வர் விஜய்யை விமர்சித்ததாக நாம் தமிழர் கட்சி வழக்குரைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து

Y7KJTSVFKZEQ3JARQWD5NSFKY4

ட்ரம்ப், ஜின்பிங் மற்றும் புட்டின் சந்திப்புக்கு மத்தியில் புதிய கூட்டணிகளை நாடும் கனடா மற்றும் ஜப்பான்!

November 20, 2026

வல்லரசு நாடுகளை மையப்படுத்தி உலக ஒழுங்கை மாற்றியமைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்து வரும் நிலையில், அமெரிக்காவின் நெருங்கிய

7

“பெரும்பாலான ஊழியர்கள் ராஜினாமாவா?” – சர்ச்சைக்கு கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் விளக்கம்!

November 20, 2026

சென்னை: தமிழக அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance TamilNadu) நிறுவனத்தில் இருந்து அதிக அளவிலான

6

“திமுக பல சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம்!” – கனிமொழி எம்.பி பேட்டி!

November 20, 2026

மதுரை: திமுக எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் என்றும், இங்கு இருப்பவர்கள் யாரும் பயப்படக் கூடியவர்கள் அல்ல என்றும்

r

உக்ரைனுக்குப் புட்டின் கடும் எச்சரிக்கை

November 20, 2026

தனது பெருமைக்குரிய கிரிமியா பாலத்தின் மீது உக்ரைன் நடத்திய அடையாளத் தாக்குதலுக்கு, ‘வலிமிகுந்த பழிவாங்கல்’ வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி

sritharan

கிளிநொச்சி – சாந்தபுரம் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்: நியாயமான கோரிக்கையை தடுத்தது ஏன்?

November 20, 2026

ளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் 7 பேரால் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கோரியும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது