இஸ்லாமிய மதத்தை நிந்தித்துக் கருத்து பதிவு செய்தமைக்காக சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்ட ஈழத்தமிழர் சிவராஜா அனோஜன் என்பவருக்கு மேன்முறையீட்டு வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் குறித்து பல கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும்.
அனோஜனின் மேன்முறையீடு வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக தூதரகத்தின் சட்ட பிரிவு தெரிவித்திருந்தது. எனினும் பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திரவை தாங்கள் சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் அவரின் ஆலோசனையின் பேரிலேயே மேன்முறையீடு செய்ததாக அனோஜனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் வங்கி கணக்கிற்கு அனோஜன் குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர்.
மேன்முறையீடு ஆகஸ்ட் 24ம் திகதி தாக்கல் செய்யப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.ஆனால் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அமைச்சு அந்த கடிதத்தை செப்டம்பர் 16ம் திகதியே கையளித்துள்ளது.
மேன்முறையீட்டில் வழக்கறிஞர் என ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் நீதிமன்றத்தில் வேறு ஒரு ஆஜரானார்.அவரது விபரங்களை குடும்பத்தினருக்கு வழங்கவில்லை.
அரசாங்கம் அனுபவம் வாய்ந்த சுயாதீன சட்ட பிரதிநிதித்துவத்தை உடனடியாக பெறவேண்டும்,எஞ்சியுள்ள அனைத்து சட்டப்பரிகாரங்கள் மற்றும் பொறிமுறைகளை தொடரவேண்டும்
ஒரு இலங்கை பிரஜையின் உயிர் ஆபத்தில் உள்ளதால் சிவராஜா அனோஜனின் உயிரை காப்பாற்ற வழிகளையும் உடனடியாக பயன்படுத்தவேண்டும் என சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(ரி)